Monday, October 13, 2014

கோபத்தில் கோர்த்து விட்டேன்!

என்னவள் பெயர் கொண்டு
நான் வரையும் கவிதைகளை-
என்னிடம் உரிமை கொண்டு
எனையாள இடமில்லை
எந்தவொரு கன்னிக்கும்!


நேற்று என்று ஒரு பொழுதில்
கவிதை வயலின் தலைப்பு தொட்டு
என் சுய சுகம் மொழிந்து வந்தேன்  

 

கடுகதி ரெயில் போல
சடுதியிலே சண்டாளி
குறுக்கறுத்து தடுத்து விட்டால்
கோர்த்த முத்து கவிதைகளை,
கோபம் தான் பொங்கி வர
கோர்த்து விட்டேன் வார்த்தைகளை
  

 உடைந்தது கண்ணாடி போல
கலங்கியது என் மனமும்
விளங்கமுடியா உறவுக்கு
விலக்கி கூறி பயன் ஏதென்று
விலகி விட்டேன் அந்தி பொழுதில்
 


இன்று அதிகாலை பொழுதில்
அடம்பிடிக்குது அந்த உள்ளம்
அனைத்தும் என் தவறே
அறிந்து கொள் என்னுயிரே என்று
அடக்கியாள நினைக்கவில்லை
விளக்கி வாழ நினைக்கின்றேன்
 

வினா உன்னிடமும்
விடை என்னிடமும்
இருந்தும் பயனில்லை
இன்றோடு நிறுத்தி விடு
இடையில் வரும் கோபங்களை,
இல்லையேல் அனுபவிப்பாய்
இடர் பெரும் துன்பங்களை.!
 
 

0 comments:

Post a Comment