Sunday, October 19, 2014

பாதி நிலவில் பாச முகம்!


சிறுவயதில் காதல் கொண்டு
உன் கணவனோடு நீயும் சென்று
அழகிய வாழ்வினை இனிமையாய் தொடங்க
ஜயிரண்டு மாதத்திலே அழகிய
நடச்திரமாய் அவதரித்தேன்
நானும் என்று அவனி முழுக்க சொல்வாயே
அலைவரிசை நீ போட்டு ,,,,,,,!

 
பட்டினியாய் நீ இருந்து
என் பசி தீர்க்கும் போது
அறியவில்லை பத்தினி
உன் பரிணாமம் நானும்


பத்துப்பேர் பல்லிளிக்க 
பட்டினியில் நான் துடிதுடிக்க இன்று 
பாவம் தான் நீயும் அன்று என்று 
பட்டததே என் உள்ளத்துக்கும் இன்று

பத்தினி உன் கதை நான் சொல்ல
பட்ட மரமும் பால் சொரியுதே அம்மா.
பரதேசியாய் நான் இருக்க
பல கரங்கள் என்னை ஒதுக்கவும்
பாலகன் இவனும் என்று
பரிவோடு அனைத்தவளும்
தாயே நீ ஒருத்தி தானே ,,,,,!


எண்ணற்ற வரிகள் நான் வடித்தேன்
எண்ணிய பலவும் நான் முடித்தேன்
தாயே நீ அருகின்றி அத்தனையும்
அநாதையாய் அலைகின்றதே அம்மா!


மூன்ரெளுத்து மந்திரமாய் அம்மா
உன் பெயர் இருக்க மூவுலகம் ஆளும்
முப்பெரும் தேவியருக்கும் முதன்மையாய்
நீ இருப்பாயோ தாயே


அம்மா முழுநிலவான உன் முகத்தை
இன்று நான் பிறை நிலவிலே கண்டேனடி
பாதி முகம் தனை காட்டி
பத்தினி உன்னை நினைவூட்டி செல்கின்றதே
பகலில் கானா பாதி நிலவும்,,,,!

0 comments:

Post a Comment