Monday, October 13, 2014

விதுரன் மாமா!

விண்ணும் மண்ணும்
கண்ணீர் சிந்த வீரச்சாவு
அடைந்தான் அவனும்.



எட்டுத்திக்கும் பட்டுதெரிக்கும்
அவன் பெயர் தான் சொல்ல
பாயும் புலி என்றும்
பாசக் கிளி என்றும்
பாவையரும் பார்த்து ரசிக்கும்
பாமரத் தமிழன் என்றும்
,


 பட்டம் பல கொண்டு
பாரினிலே உயர்ந்து வந்தான்!
பட்டினத்தாரும் தோற்றிடுவார்
மாமன் அவன் ஆங்கிலம் கேட்டு!
படித்த மாமன் அவன் தானே!
பாதியிலே விட்டு சென்றான்
பாரினிலே எம்மையும்!



எமனுக்கும் எரிச்சல் வந்து
எருமை கிடாய் ஏறி வந்து
காவுதான் கொண்டு சென்றான்
எதிர் பாரா தருணமதில்.


வீடுக்கொரு வீரன் என்று
வீடுதாண்டி சென்று நீயும்
வீரம் செறிந்த மண்ணினிலே
வீதியிலே விட்டு சென்றாய்
விளக்கேற்ற உறவுகளை!


வேங்கை தான் நீயும்
என்று வேர் விட்ட எம் குடும்பம்
வேரறுந்து போனதடா
"விதுரன்" நீ விட்டு சென்ற
வேதனைகள் தாங்காமல் 


தமக்கை முதல் தங்கை வரை
கண்ணீரில் மூழ்கிய தருணம்.
அடைந்திருக்கும் அவன் ஆத்மா
அமைதியாக சாந்தி தான்!


புனைப்பெயர் தான் கொண்டு
புதுவரிகள் எழுதிடவே.!
புனைப்பெயர் தான் தேடி
புத்தியை தீட்டி வந்தேன்!


மாவீரனாய் மறைந்த தாய்,
மாமன் பெயர் இருக்க
வேறு ஏதும் பெரிதல்ல எனக்கென்று!
இன்று முதல் புனைகின்றேன்
வீரவேங்கை உனது ''விதுரன்"
என்ற பெயரை நானும்!
 
 
 
 

0 comments:

Post a Comment