Saturday, December 6, 2014

நிலவும் நானும்!

தேய்ந்த நிலவை பிடித்து
தேவதை உன்னை விசாரித்தேன்
தேவனவன் துணையில் உன்
தேவதையும் நலம் என்றது!


சட்டென்று பல கேள்வி
சடுதியாய் தொடுத்தேன்
மூ வேளை ஆகாரம்
மூச்சு முட்ட உண்டாளா?
துயில் கொள்ளும் வேளையில்
தூக்கம் இன்றி தவித்தாளா?


அறுசுவை உணவையும்
அழகாய் சமைத்து போட்டாலும்!
அதை காட்டி இதை சாட்டி
அனைத்தையும் வெறுத்தொதுக்குவாளே!


சற்றே திமிரும் அவளுக்கு
முற்றே கோவம் வந்தால்!
முன்னிருப்பவரை கண் பாராமல்
கதை பேசி வெட்டி செல்வாளே!


என்னோடு பேச வந்தால்
எள்ளளவும் கோவம் இன்றி
எண்ணிய பலவும் பேசி தீர்த்து
எண்ணமெல்லாம் வளர்த்து விட்டு
என்னையும் மயக்கி விட்டு
எத்திசையென அறியமுன்
எழுந்தோடி செல்வளே!


பருவம் வந்த நிலவடி அவள்!
பரீட்சைக்கு தோற்ற வேண்டி
பகலிரவாய் படிக்கின்றாளோ-இல்லை
பாட்டு தான் பிடிக்கும் என்று
பண்ணிசை தான் கேட்கின்றளோ!


நேற்றுத்தானே பேசவில்லை
நெடுநாளாய் தெரிகின்றதே!
நெஞ்சமும் வலிக்குதடி! தோழி!
கொஞ்சம் அவளை அழைக்க சொல்லு
கொஞ்சி நாலு வார்த்தை பேச!


கொஞ்சிப்பேச நீ கெஞ்சிக்கேட்டது
மதி(நிலவு) எனக்கே வலிக்குதடா!
உண்மை ஒன்று சொல்கின்றேன் கேள்
உரைக்கும் படி இருக்குமாடா!


நிலவுக்கே தேவதையவள்
நித்தமும் உன் நினைவிலே தான்
பொங்குகடல் தாண்டி நீ இருக்க-அவளுக்கு
பொங்கி எழுகின்றது உன் நினைவுகளும்


அதிகாலை ஆகிடிச்சு தோழா-என்
ஆதவனும் வந்து விட்டான்!
வங்ககடல் மீதாணையடா
வருமொரு நற்செய்தி உனக்கு
வண்ண மலர்மாலையுடன்
வருந்தாதே தோழா! வருகின்றேன் நாளை!

0 comments:

Post a Comment