Wednesday, December 24, 2014

நத்தார் நாயகனே!

மார்கழி மாத முன் பனிக் காலம்
கொட்டும் பனிப்பாளம்
வெடவெடுக்கும்

விடியற்கால சாமம்


மாட்டைக்குடிலில்
மரியாள் மடியில்
இடையர்கள் நடுவில்
மா மன்னவர் மழலை வடிவில்


பிறந்தது தொழுவமதில்-சுரந்தது
அன்பெனும் செல்வம்
அழுபவர் கண்களின் நீர்தனை
அன்புடன் துடைத்திடும்
மனம் கொண்டு
அடுத்தவர் வாழ்வில்
துயரினைக் கண்டு
அழுதிடும் நெஞ்சினை
அடைந்திடும் வழி


விளக்கிடும் வகையில்
வாழ்ந்திட்ட தேவமைந்தன்
வியந்திடும் கருத்துக்கள்
மொழிந்திட்டான்
விடிந்திடும் வாழ்க்கை
உழைப்பவர் வாழ்வில்
விரைந்திட்டு நாமும்
வரைந்திடுவோம் காவியம்


இளைஞர் எம்
முன்னோடியே
விடுதலைப் போராளியே..
நாமும் வருவோம்
உனது தடம்படித்தே..!
தோழனே ஜேசுவே
உன் பிறந்த நாளில் உமை
அன்போடே நினைவுகூறுகிறோம்..!


வொட்காவுக்கோ.! வைனுக்கோ.! அல்ல
கேக்குக்கோ,! புடிங்குக்கோ.! அல்ல
சாண்டாவுக்கோ.! சாந்தாவுக்கோ.! அல்ல
உன் தியாகத்தை மனதில் இருத்திட
உன் தடம் பற்றி நின்றிட..!


இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்!

0 comments:

Post a Comment