Tuesday, December 16, 2014

பாடசாலை சிதறல்கள்!

பெற்ற "தாய்" மறந்திடினும்
பிறந்த "மண்" அழிந்திடினும்
கற்ற "கல்வி" அதை கற்பித்த "பள்ளி"
உன்னை மறவேன் என்றும்!


அதிகாலை ஆயிடிச்சா
அரக்க பறக்க எழுந்திடிச்சு
அரைகுறையா முகம் கழுவி
அடுத்த வீட்டு வேளியிலே
அலைமோதும் காற்சட்டையை
அரைமணிநேரம் போராடி
அதன் பின் எடுத்து போட்டு கொண்டு
அரைவயிறு கஞ்சி உண்டு
பாய்ந்து வீழ்ந்து செல்வேன்
பாடசாலைக்கு அன்று நானும்!


பட பட என்ற ஓசை நெஞ்சில்
அசம்புலி ஆரம்பிசு ஐந்து நிமிசமாச்சே
ஐயோ இன்று செத்தேன் நான்
சமாளிப்புக்கு பொய் தேடி
அவசரத்துக்கு அதுவும் இல்லை
"உதவி அதிபரும்" உபசரிக்க வந்திடுவேர்
வாங்கிய அடியுடன் வகுப்பறை
வரவேற்கும் என்னை!


ஆண்டு ஒன்றிலே,
அரிவரி நான் படிக்காம
"நிலா" டீச்சர் போட்ட அடி!
இன்றும் என் நினைவில்
நீங்காமல் இருக்கு இப்போ!


கைபிடிச்சு கலை படிக்க
கற்பித்த ஆசானே உமக்கு!
அழியா இடமுண்டு
என்றும் என் நெஞ்சில்!


அழகிய நண்பர் கூட்டதோடு
ஐந்தாம் வகுப்பு வரையில்
அலசல் புலசல் பலவும்
அடிக்கடி அடிதடியும்
அன்பின் அரவணைப்பும்!
எமக்கிடையே வந்து போகும்
மனதை மயக்கும் "கன்னியர்" சிலரும்


கல்லூரி கலைந்தவுடன்
மாணவ செல்வங்களின்
கல்லடி தாங்காமல்!
மாமா வீட்டு மாமரமும்
மறைவதற்கு இடம் தேடிய காலம்!


புலமை காட்ட என்று புலமை பரீட்சை
ஒன்று புது வடிவில் வந்திச்சு அன்று!
குங்கும பெயர் கொண்டு
குலவிளக்காய் ஒரு ஆசான்
"ரதி" டீச்சர் வந்தமர்ந்தா
ஆண்டு ஐந்து ஆரம்பத்தில்


அழகாய் பாடம் சொல்லி
அன்பால் என்னை அள்ளி
அணைத்து கொண்ட ஒரு ஆசான்
ஆண்டு பல கடந்தும் -அழியா
உருவமாய் என்மனதில் இன்றும்!


நண்பரோடு விளையாடுகையில்
நாடியில் வந்த தளும்பு-இன்றும்
நிலைத்திருக்கு நீங்க நினைவு போல
ஆயினும் என்ன பயன்!


காலம் கடந்திடிச்சு கடலும் தாண்டியாச்சு!
என் கனவுகளும் கலைந்திடிச்சு!
கடவுளிடம் வேண்டுகின்றேன்
மீண்டும் கல்லூரியில் நான்
கற்கும் படி செய்யுமாறு!

0 comments:

Post a Comment