Wednesday, October 29, 2014

அடங்காத (என்) ஆசைகள்!

ஆசையாகத்தானிருக்கிறது!
ஆசைகளை எல்லாம்
உன்னிடம் சொல்லிவிட

ஆசையாகத்தானிருக்கிறது!


விடியல் தலை காட்டும் வரை
மடியில் தலை சாய்த்துக்கொண்டு;
நொடியும் இடைவெளியின்றி,
பேசிக்கொண்டிருக்க
ஆசையாகத்தானிருக்கிறது!


மங்கிய நிலவொளியில்
பொங்கிய சாதத்தை
இங்கிதம் பார்க்காமல்ஊட்டிவிட;
ஆசையாகத்தானிருக்கிறது!

கண்ணிறம் கருப்பல்லவா!
செந்நிறம் உதடல்லவா!!
பொன்னிறம் மேனியல்லவா!!!
உன்னைப் பாடிவிட
ஆசையாகத்தானிருக்கிறது!

சோர்வோடு நீ இருக்கும்போது
மார்போடு அனைத்துக்கொண்டு;
உயிரோடு கலந்த உன்னைப்
பரிவொடு விசாரிக்க
ஆசையாகத்தானிருக்கிறது!

பின்னால் உன்னை அமரவைத்து
முன்னால் போகும் வாகனங்களை
என்னால் முடிந்த மட்டும்
விரட்டிப் பிடிக்க
ஆசையாகத்தானிருக்கிறது!


குளித்து விட்டு நீ தலை துவட்ட
தௌ¤த்து விழும் அந்த துளியில்
சிலிர்த்துக்கொண்டு நான் எழுந்து,
அப்படியே உன்னைக் கட்டிக்கொள்ள
ஆசையாகத்தானிருக்கிறது!


காதருகில் வைத்த அலாரம்
12 மணி இரவில் கதற
அலற லோடு நீ எழும்
அந்த தருணத்தில்
பிறந்த நாள் வாழ்த்துக் கூறி,
முத்தமிட
ஆசையாகத்தானிருக்கிறது!


நகத்தை நீ கடிக்கும்போது
நானும் அப்படியே செய்து
முகத்தை நீ திருப்பும்போது
நானும் அப்படியே செய்து
கோபத்தில் இருக்கும்
உன்னை மேலும் கோபமூட்ட
ஆசையாகத்தானிருக்கிறது!


நீ சிரிக்கின்றபோது
உனக்கு பின்பாகவும்;
நீ அழுகின்றபோது
உனக்கு முன்பாகவும்;
நீ நடக்கின்றபோது
உனக்கு பக்கமாகவும்
என்றுமே காவலனாயிருக்க
ஆசையாகத்தானிருக்கிறது!


ஆசையாகத்தானிருக்கிறது!
ஆசைகள் எல்லாம்
உன்னுடன் நடந்துவிட,
ஆசையாகத்தானிருக்கிறது!

என் தாய்க்கு வாய்க்கும் மருமகள்.!

தெம்மாங்கு பாடி தேவதாஸ்
ஆக ஆசை இல்லை
தேன் மதுர தமிழோசையில்-தேன்

காவியம் பாடிடவும் தெரியவில்லை
இருந்தும் வடிக்கின்றேன்
என்னவளுக்கு ஒரு காவியம்,,!


மகத நாட்டு மன்னன் மகன் ,
இயக்கர் இன தலைவியை மணந்தோ
ஈழ மகுடம் சூடிக் கொண்டானடி?
என் இதய கனியே உன்னை மணந்தால்,
நான் எதற்கு மன்னன் ஆவது.?

பண்டார வன்னியன் ஆண்ட
பசுமை நிலத்தில் பவனி வருபவளே!
பாவபட்ட உள்ளம் ஒன்று-உனை
நினைத்து பரிதவிக்கின்றது,
பறந்தோடி வந்தால் குறை வந்து விடுமென்று
பொறுத்திருக்க சொன்னாயோ?


பொத்தி வைத்த ஆசை எல்லாம்,
உன் தமக்கையிடம் மொழிந்து விட்டேன்!
பொல்லாப்பு வந்து விட்டால்
பொறுமை இழந்திடுவேன்டி!


ஆண்டிரண்டு ஆகட்டும் அதன் பின்
பார்போம் என்று அமைதியாக சொன்னயே!-என்
அன்னை அவள் நிலை கண்டு
அதை நானும் ஏற்றேனடி

வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால்
எள்ளும் எண்ணையாகி வந்திடும் தான்!
என் மாமா/மி மட்டும் என்ன விதி விலக்கா?


கார்த்திகை வந்தால் கன்னி-நம்
உறவு வருடம் ஒன்று பூர்த்தி ஆகின்றதே!
நினைவிருந்தால் நிலை மாறாமல் நீ இரு
நிச்சயம் மணவாட்டி ஆக்குவேன்-உன்னை
என் அரண்மனைக்கு அரசி ஆக்கும் நாள்-வெகு
தொலைவில் தான் இருந்தும் பொறுத்திரு
அயல் தேசம் நான் சென்றால்
அதுவும் கிட்டி விடும்...


காத்திரு கன்னியே காலமெல்லாம்
துணை வருவேன்!
அவசரத்தில் முடிவெடுக்காதே
முத்தெடுப்பது எளிதல்ல!
முக்குளிக்க நாள் வரட்டும்!

பொன்னி உன் நினைவினாலே!
பொங்கி வருகின்றது கண்ணீரெல்லாம்-கை
குட்டை கனமாகியது காரணம் நீ என்பதால்!


தென்றலைப் போல நடப்பவள், நீ
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்,நீ
செந்தமிழ் நாட்டு திருமகள்,நீ
எந்தன் தாய்க்கு வாய்க்கும் மருமகள்.! நீ

பெயர் சொன்னாலோ பெரும்
பிரச்சணை சூழ்ந்து விடும்
தெரிந்தவர்கள் மொழிந்திடட்டும்
இலங்கை திரு நாட்டில்
இதய பூமியில் வசிக்கும்
என்னவள் பெயரை!

என் தந்தை எனக்கு ஆசான்.!

ஒவ்வொரு இடத்திலும்
உனக்கு பெயர்கள் வித்தியாசப்பட்டாலும்
எனக்கு பிடித்த பெயர்

அப்பா மட்டும்தான்!

உன்னைப்பிரிந்து..
வருடம் ஏழு ஆகிவிட்டதே-அப்பா!
நீ இல்லாத பொழுதுகள்
மின்சாரம் இல்லாத வீடாய்..!
மனிதர்களே இல்லாத காடாய்..!
அறுக்கும் முன் கத்தும் ஆடாய்..!
காட்சியளிக்கின்றது!


நீ என்னைப்பார்த்து சிரித்த..
கடைசி சிரிப்பு எது?
நீ என்னிடம் பேசிய..
கடைசி வார்த்தை எது?
நீ என்னைப் பார்த்த..
கடைசி பார்வை எது?
நீ என்னைத் தொட்ட..
கடைசி தொடுதல் எது?

முயற்சிகள் சிலநேரம்
முடக்கிவைக்கப்படும்பொழுது
தன்னம்பிக்கையாய் இதயத்தில்…
துளிர்த்து வருகிறாய் நீ!


நீ
உறவுப்பயணம் முடித்துச் சென்ற
அந்தி மாலை..
முன்பே தெரிந்திருந்தால்
முந்தைய பகலே!
நிறைய பேசியிருப்பேனே அப்பா?

உன் குழந்தையாய் நானானதுபோல்
என் குழந்தையாய் நீயாவாயா?
நடக்கப்போவதில்லை என்றாலும்
நப்பாசையில் கேட்கின்றேன்

யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இல்லாமல் போன நாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…பேசவேண்டும்!

கடிதம் கை சேரும் கணம்.

ஊனமான நெஞ்சம் மெல்ல
தத்தித் தத்தி
தாவும்!

இயலாமையில் தீக்கிரையாக்கிய
என் கவிதைகள் கொஞ்சம் சிறகு
முளைத்துப் பறக்கும்!

அறுப்பட்ட வீணை மனதில்
மெல்லிய கீதம்
இசைக்கப் படும்!

எரித்துத் தொலைக்கும்
என் வீட்டு நிலவு
குளிர் பரப்பும்!

என் காதல் வால்
முளைத்துத்
தாவித் திரியும்!

இத்தனையும் நடக்கும்!
ஊடல் உருகி
கூடலாகும் போது
அனுப்புவாயே
ஒரு கடிதம்!
அது வந்து சேரும் கணம்

மரணத்தின் வாசலில்.!



பல்லாயிரம் ஆசைகளைச் சுமந்து

பவனிவந்தேன் பாரில்நான்!
எல்லோரும் செயும் நல்லவையும்
தீயவையும் செய்திருப்பேன்! என்றாலும்
சுவனத்தில் ஈடேறவே
உலகில் பலசெய்தேன்! இன்று
எனது உள்ளத்து வேதனைகள் பற்றி
கடலளவு நான் கத்திக்கத்தி
குரல்ஓயுமட்டும் சொன்னாலும்
யாருக்கும் கேட்கப்போவதில்லை!

ஏ! இறைவா!
உத்தம்மான படைப்பாக நீ
எங்களைப் படைத்தாய்
நாங்கள் எங்களை மறந்து
எத்தனை தவறுகள் இழைத்தோம்!
உன்னிடம் அழுதுகேட்கிறேன்....
எல்லோரும் ஒன்றாக வாழ்ந்திட நீ-எண்ணிடு!
சாதித்துவ அரக்கர்களை அழித்திடு!-அப்போது
பிணமாய் உள்ள எம்காதுகளில்-அந்த
முணுமுணுப்புக்கள் எழாது!
உண்மை வழியை
உத்தம வழியை காண்பித்திடு!
எல்லோரும் இன்புற்றிருக்க....
எல்லோரும் இன்பமாய் உன்னருகில்வந்திட.....!

கனவு!

மனதில் ஆயிரம் கனவுகள்..!!
வறுமை ஒழிந்து
செல்வனாய் வாழக் கனவு..!!
அம்மாவிற்கு ஆயிரம் புடவை
புதிதாய் அளிக்க கனவு..!!
ஈரடுக்கு மாளிகையிலே
தந்தை அமர்ந்து உணவுண்ன
காணக்கனவு..!!
தங்கையின் கையில்
வையிரம் மின்ன நான் காண கனவு..!!
கவிஞனாய் நானும்
திரைப் பாடலில்
மினுமினுக்க கனவு..!!
கனவுகள் நினைவானதாக
நித்தமும் கனவு..!!

தாய்த்தமிழ்!

நீ கற்றுக்கொடுத்த தமிழ்மொழியால்
உன்மகனான நான் – தமிழ்
இலக்கியத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதைப்

பார் அம்மா...!


பல ஆண்டுகளாய் 

நம்மிருவரையும் பிரித்துவைத்தே
வேடிக்கை பார்க்கிறது காலம்!
பிணந்தின்னும் கழுகுகள் போல்
பணம்பண்ணும எந்திரங்களாய்
மாற்றிவிட்டது காலம்!

பசிதூக்கத்தை மறக்கவைத்து
பாசத்தைத் துறக்கவைத்து
உணர்வுகளை இழக்கவைத்து
மனிதநேயத்தை மறக்கவைத்து
மரக்கட்டைகள் போல
மாற்றிவிட்டது காலம்!


மீசை முளைத்தபின்னும் – முகத்தில்
முடி முளைத்தபின்னும்
உருவமது மாறியபின்னும் –என்
பருவமது மாறியபின்னும்
கலப்படமில்லாத தாய்ப்பாலைப்போன்ற
பரிசுத்தமான உன் அன்பைத்தேடும்
ஈர் பத்து வயது பாலகனாய் நான்!!

மறந்து விடாதே!!!

எனக்கு இன்னும்- அந்த 
ஒற்றை வார்த்தை
கிடைத்தபாடில்லை 

உன்னிடமிருந்து......

என் எண்ணப் பறவைக்கு மட்டும்-
புதுப் புது சிறகுகள்-

முளைக்கின்றன உன்னைப் 
பற்றிய கவிதைகளாய்.....!!!

அந்த வார்த்தை மட்டும்

சொல்லி விடு....!!
சந்தக் கவிதைகள்-
காதல் 

மன்றத்தில் சிந்தாமல் சிதறாமல் 
மொத்தமாய் அரங்கேறும்
சத்தியமாய் சொல்லுகிறேன்!!!

நீ இதைச் செய்வதும்
நான் அதில் உய்வதும்
உன் கையில் பெண்ணே!!!
மறந்து விடாதே!!!

முள்ளும் மலரும் கல்லும் கரையும்!

புறாதூது அனுப்பினேன்
பூங்கொடியாள் பார்க்கவில்லை
பூங்கவிதை அனுப்பினேன்
பூங்காவனம் படிக்கவில்லை


பூம்பட்டு அனுப்பினேன்
பூவையவள் கிறங்கவில்லை
மலர்கொத்து அனுப்பினேன்
மங்கையவள் திறக்கவில்லை 


இதயத்தை அனுப்பினேன்
எங்கிருந்தோ வந்தாள்
உதயமே நீயென்றாள்
உயிர்மட்டும் என்னிடமில்லை!!

திருமண அழைப்பிதழ்.!



நெருடலில் நான்

நெருங்குகிறாய் நீ!
நிற்குலைந்தேன்
நிதானத்துடன்...
கைவைத்ததில்
களைந்தது
உடுப்பு மட்டுமல்ல..
உள்ளமும்தான்
உள்ளம் கொடுப்பாய்- என்று
உன்னிடம் நின்றேன்
உதடுகடிக்கிறாய்
விருப்பமாய் சொல்லியிருப்பேன்
விரல்தொட்டு நீ- நிற்க
விட்டு விடாதே!-என்று
ஆசை அவ்வளவுதான் என்றாள்
அந்நியோன்யம் குறைந்து விடும்
ஆதலால்
முற்றுமில்லாமல்...
முடிவுமில்லாமல்...
உருகி
மருகி
நிற்கிறேன்
மணவாளனாக-மணவாளியாக
அவன் ! அவள் !

அகரவரிசை காதல்..!

அன்பால் வளர்வது காதல்
ஆசை தருவது காதல்
இருவரை இணைப்பது காதல்
ஈருடல் ஓருயிராவது காதல்
உண்மை உரைப்பது காதல்
ஊக்கம் தருவது காதல்
எதிர்ப்பை வெல்வது காதல்
ஏழ்மை பாராதது காதல்
ஐயங்கள் இல்லாததே காதல்
ஒற்றுமை வளர்ப்பது காதல்
ஓரினமாய் இணைப்பது காதல்
ஔசித்தியம் வளர்ப்பதும் காதல்.


   "ஃ" இதுக்கு நீங்களே 
சொல்லுங்க பார்க்கலாம்?
 

சிந்தையெல்லாம் சின்ன மயில்...!

சந்திக்கும் போதெல்லாம்
சகஜமாய் பேசிச் சென்றாலும்
உன்னைக் காணாத நாட்களின்

உறங்கா இரவு நேரங்களிலெல்லாம்
நரகத்தை கண்டேனடி...


நண்பர்களிடம் அரட்டையென்பதே
அடியோடு மறக்கடித்து
உறங்காமலே நாள் முழுவதும்
உன்னோடு உரையாட
என் மனதும் துடிக்குதடி...

உன் விழிகள் இரண்டும்
நிலவாகி போனதாலோ என்னவோ
என் உறங்கா நாட்களில்
இரவும் முடியாமல்
பகலென்பதே விடியாமலே கிடக்குதடி...

விழித்திருக்கும் நேரங்களிலும்
கனவாக வந்துச் சென்றும்
உறக்கத்தையும் பறித்துக்கொண்டதால்
என் படுக்கையறையில்
உளறலோடே தினமும் புரளுகிறேனடி...


உன் நினைவுகளோடு
அசைபோடும் உறங்காத இரவிலெல்லாம்
கொசுக்களின் ரீங்காரம் கூட
இதமான ரிதமாக
என் செவிக்குள்ளேக் கேட்குதடி...


இப்போதெல்லாம்
உறக்கமேன்பதே இரவில்
இல்லாத காரணத்தால்
அலுவலகத்தில் முழுநேர வேலையிலும்
உருப்பிடியாய் இடையிடையே
உறங்குவதும் ஒரு வேலையென
உருமாறி போனதடி...


அச்சிறுசிறு உறக்கங்களின்
ஊடாகவும் உன் குறுஞ்செய்தி
குறுக்காய் வந்துவந்து
என்னை எழுப்பிவிட்டு
கைக்கொட்டிச் சிரிக்குதடி...

உன் நினைவுகளினால்
தூக்கமே இல்லாததாலேயே
கிறுக்குக் பிடித்தாற்போல்
அனுதினமும்
கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்
கிறுக்கல்களாய் நானடி...!

கற்பனையில் காதலன்!


மழைக்கு
காத்திருக்கும் உழவனாக....!!
மரணத்திற்கு தவம்
கிடக்கும் கிழவனாக....!!
அலை தொட கரையில்
காத்திருக்கும் பாதங்களாக...!!

நிலவை உரசும் மேகங்களாக.!!
உன் நினைவை உரசி
சென்றிடும் சோகங்களாய் ....!!
பூத்திருக்கும் பூவின் மேல்
காத்திருக்கும் வண்டுகளாக..!!
காற்றினில் மணம் பரப்ப
காத்திருக்கும் செண்டுகளாக..!!

மலைக்குன்றுகளின் தாகம் தீர்க்க
காத்திருக்கும் அருவிகளாக...!!
ஆதவன் வர இரைதேட
செல்ல காத்திருக்கும்குருவிகளாக...!!
தாய் மடி பிடித்து பால் குடிக்க
காத்திருக்கும் கன்றுகளாக..!!

இப்படியெல்லாம் எனது
காத்திருப்புகளும் தொடர்கிறது.....!!
மாதுவே நீ புறா முலம்
அனுப்பும் ஒற்றை தூதிற்காக...!!

படித்து படித்து மடித்து வைக்கப்பட்ட
கடிதங்களை எல்லாம் கவிதை வரிகளாய்
மொழி பெயர்த்து மனபெட்டியினுள்
அடுக்கி வைத்துள்ளேன்
என்றும் அழியா பொக்கிஷமாய் ....!!

உன் கற்பனை காதலன்....!

அம்மா..!

அன்னை என்றொரு ஆலயம்
அங்கே அன்பு மட்டுமே ஜீவனம் .
காணிக்கை கேட்காத கடவுள் அவள்
தரணியில் காணக்கிடைக்கும் 

அவளின் அருள் .

பத்து திங்கள் கருவிருந்தேன் -அவள் 

பளிங்கு முகத்தினை கண்டிடவே !
என்ன தவம் செய்திருந்தேன்
தாயாய் இவளை கொண்டிடவே ! 


பாசம் புரளும் வங்கி அவள்
வட்டி வசமின்றி முழுதும் தந்திடுவாள் .
பத்து பிள்ளை பெற்றாலும் முத்தம்
பாங்காய் பகிர்ந்து தந்திடுவாள் .
எத்தனை பிறவி கொண்டாலும்
உன் மகனாய் வாழும் 

வரம்வேண்டும் அம்மா!

எல்லாம் பொய்...!

இந்த உலகவும் -பொய்
அதில் வாழும் உறவுகளும்
பொய்....!
மனிதனும் பொய் -அவன்
மனங்களும் பொய் -அவன்
வார்த்தைகளும் பொய்....! 


சிலைகளும் பொய்..!

சிற்ப்பங்களும் பொய்.....!
மனிதன் சுவாசிப்பதும் -பொய்
உயிர்வாழ்வதும் பொய்..!


விலங்குகளும் பொய்-அதன்
ஒசைகளும் பொய்...!
சங்கீதம் பொய் அதன்
ஆலபணைகளும் பொய்.....!
என்னை தவிர இங்கு எல்லாம்
பொய்...!

கயல்விழி களவாணி நீயோ?

உறக்கம் தொலைத்த பாவி நான்
களவாடிய களவானி நீ....
கண் மூடி படுத்தாலும்
கரு விழியில் உன் விம்பம்....

மறந்தும் கண் மூடவில்லை
தெரிந்தும் வருத்தபட வில்லை


களவாடிய கன்னியே,,,
கண் அசைத்திவிடு 

காதல் மொழி பேசி விடு...
கரை கண்ட கவிஞர் எல்லாம்
காதல் வயப்பட்டார்களா என்று தெரியாது


ஆனால் உன் கண்கள் கண்டால்
கல்லும் காதல் கொள்ளும்-
உயிர் 
பெற்று கவிதை சொல்லும்-காதலியே
பரிதவிக்கும் என் உள்ளத்திற்கும்
பாதை அறியா என் வாழ்க்கைக்கும்
விடை கொடுத்து..புது விதி எழுதிடு..!

கனவுகள் தொலைந்ததெங்கே...?

கறிவேப்பிலை தொட்டு
கத்தரிக்காய் கருவாடு 

 நச்சிரகம் முதல்
வெந்தயம் பெருஞ்சீரகம் வரை
தமிழ் கடைகளில்
எல்லாமே கிடைக்குதம்மா..!

தொலை பேசியில் அம்மாவை 

சந்தோஷ படுத்திய
சமநேரத்தில் இதயம் கனத்து 

கண்கள் பணித்தது.!

உள்ளே அம்மாவுக்கு
சொல்லாமல் ஒரு 

கண்ணீர் வாசகம்.
பக்குவமாய் பதமாய் சமைக்கவும்
பாசத்தோடு பரிமாறவும்
நீங்கள் தான் அருகில் 

இல்லையே!!!

எந்த கடையில் 

கிடைக்குமோ
தாயின் அக்கறையும் 

பராமரிப்பும்..!?

கல்லறை உணர்த்திய காதல்.!

யாரிடம் கண்ணில் படாத ஈரம்,
காதலை தொடங்கியவுடன் 

பட்டது... !!!
யாரிடம் சொல்லாத
காதல்,
அவளை பார்த்தவுடன் சொல்ல 

துடித்தது... !!!
யாரிடம் வாழத வாழ்க்கை,
அவளுகாக் மட்டுமே வாழ 

ஏங்கியது... !!!

யாருக்காவும் விடாத உயிரை
அவளுகாவே உயிரை 

மறித்தது... !!!
யாருக்காக கொடுக்காத உடலை
அவளுக்காகவே கல்லறைக்கு 

கொடுத்தது...!!!
அவள் கொண்டு வந்த மலரகாகவே
என் காதல் உண்மை என்று 

அவளுக்கு உணர்த்தியது... !!!

Tuesday, October 28, 2014

உன் உயிர் இது!


அழகிய உன் இதயத்தை
ஆள்வதற்கு தவம்
இருக்கிறேன்..!!!
இனியும் ஒருவன்
வரப்போவதில்லை
ஈடு இணை எனக்கு
எவனுமில்லை..!!


உலகறிய உன்னை
தூக்கி செல்கையில்,
ஊர் கூடி வந்தாலும்
கவலை இல்லை...!!
எத்திசையில் நீ
இருந்தாலும் உன்னை
ஏந்தி செல்ல
ஓடோடி வருவேன்..!!!


ஐயம் வேண்டாம் அன்பே,
ஒரு மாறாத உண்மை - என்றும்
நாம் ஓர் உயிராகவே
இருக்கிறோம்..!!!
இப்படிக்கு உன்
உயிர் காதலன்..!

Sunday, October 26, 2014

கருவானாள் கருவாச்சி


புத்தகம் தொட்டதில்லை
புகழ் கவி படித்தும் இல்லை
பூமகளே உன் புன்னகை கண்டு
புது கவிகள் வடிக்கிறேன்
இன்று...!


புதிதாய் நான்
புவியினிலே உதித்திட
புயலாய் நீ மாறி
புகுந்து என்னை உலுப்பிட

பனித்துளி மேல் படர்ந்திருக்கும்
பச்சிளம் புற்களை
பார்த்து பரவசமாய்
பசுமாடும் மேய்வது போல்!


காளை நானும்பசி தீர்க்க
காதல் எனும் அழைப்பிதழ் கொண்டு
கன்னி உன்னை அழைத்தேனன்று


காளை நீயும் பொறுத்திரு
கைசேரும் நாள் வரட்டும்
கைவரிசை காட்டி விடு
என்று நீயும் சொல்லி விட்டு
கலைந்து நீயும் சென்றாயே-கண்ணே
என் கனவில் அன்று,,,!


கன்னி உன்னை கண்ட முதல்
கண்ணிழந்து கற்பிழந்து
காளை நானும் அலைகின்றேனே!
கண்ணால் எனை கற்பழித்து
காதல் என்ற வலை விரித்த


கருவாச்சி உன் நினைவுகளே
கவிஞனாய் எனை உருவாக்கியது...!

உருவாகும் ஒவ்வொரு கவிதைக்கும்
உந்தன் நினைவே-இன்று
கருவாகியது...!

"கத்தி"யின் காதலி "பூஜை"யின் புதுமொழி தோழி!


ஆருயிர் நண்பி என்றும்
ஆரா துயர் தோழி என்றும்
உன்னை நான் பார்த்து வந்தேன்


நீ செய்யும் தவறெல்லாம்
கண்டு தட்டி நான் கேட்க
சந்தேகம் கொள்கின்றாய் என்று
சடுதியிலே சொல்கின்றாயே


என் சொந்தம் பல உண்டு
உனக்கெதுக்கு வீண் வேலை
என்று நீ கேட்டிருந்தால்
ஏற்று நான் சென்றிருப்பேன்.


எடுத்தெறிந்து பேசி விட்டு
"‪#‎கத்தி‬",முதல் "‪#‎பூஜை‬" வரை
கண்கொள்ளா காட்சி பார்க்க
பணம் கண்டு சென்றாயோ?


வேலை ஏதும் இன்றி
வெளிநாடு தானே சென்று
அரை வயிற்று கஞ்சி ஊத்த
உன் அப்பன் படும் பாடு
அறிந்துதான் கேட்டாயோ


அம்மாவுடன் சண்டைபிடித்து
அலங்கோலமாய் ஆடையணிந்தாய்
உணவருந்தா விட்டாலும்
உதட்டுச் சாயம் பூசினாய்
காலம் தாழ்த்தி வீடு வந்து
காரணம் கேட்க கோயில் என்றாய்
கைபேசி தான் அதன் பெயர்-ஆனால்
எந்நேரமும் உன் காதோரம்.


எடுத்தெறிந்து பேசி விட்டு
தியேட்டருக்கும் செல்கின்றாயா?
செல்லடி செல்லமான தோழியே


துன்பம் என்று வரும்போது
துவண்டு நீ திரியும் போதும்-என்னை
துரோகி என்று அழைத்த உன்
வாயால் துணை வா என்றலைப்பாய்


அவ்வேளை அறிந்து கொள்வாய்
நண்பனாய் நாயகனாய் -உன்
பார்வையின் துரோகியாய்
இறுதி வரை உன் துணையாக
நான் மட்டுமே வருவேன் என்று!


விட்டு சென்ற நொடியில் என்
விழி கண்ட வலிகளை
வரிகளில் திரையிட்டிருக்கேன் உன்
விழி கொண்டு பார்த்து செல்வாய் என்று!

Thursday, October 23, 2014

பூவைக்கு யார் பூவைப்பார்?

ஆண்டாண்டு காலமாய்
ஆண்ட பூமியினை
பூண்டோடு அழித்துப்
புன்னகையைச் சீரழித்தீர்
மாண்டோ போனோம்
மறவர்நாம் - வடலிகள்
மீண்டும் வானுயரும் 


வேண்டு மெமக்கும்
விடுதலை யென்று
தீண்டும் வெயிலில்
பட்டினி கிடந்துபின்
ஆகாது அதுவென்று
அறியும் ஒருநாளில்
தீட்டினோம் கூராயுதம்


இறுதித் தருவாயில்
உயிர்நீத்த உடற்கெல்லாம்
சிறுதீ மூட்ட ஆளில்லை
குற்றுயிராய்க்
கிடந்த உடலேறிச்
சுகம்கண்ட காடையரின்
பண்பாட்டைப் பார்த்தே பழகு


ஆயினும் பெரிதாய்
ஆக்கிய தொன்றில்லை
பேயினுக் கெதிராய்ப்
போர்க்கொடி தூக்கியெம்
பூவையும் பொட்டையும்
இழந்தோம் - நம்வீட்டு
பூவைக்கு பூவைப்பார் யார்?


புண்ணதுவே புண்ணாக
இருக்கட்டும் நெஞ்சத்தில்
மண்ணுக்காய் இல்லாமல்
மாண்டவென் தோழர்க்காய்
வென்றே தரவேண்டும்
விரைவாக சந்ததியை
மனம் இன்றி அலைகின்றேன்
மனம் முடிப்போம் விதவை
வா மணப்போம் விதவை.!

Tuesday, October 21, 2014

தீபாவளி திருநாளில் என் நிலவுக்கொரு வரி!

இரவின் மடியில்
நிலவின் ஒளியில்
நிழலாய் விழுந்த மலரே...

உன் கவிதை மொழியில்
கவலை மறந்து இனிது
துயிலும் குயில் நானே...

வருடம் ஒன்று கடந்து
வயது ஒன்று கூடியதால் - நானும்
பருவ வயததைடந்து
பார்ப்பதெல்லாம் ரசித்தேனன்று...


மரித்து போன நரகாசுரனும்
மறுபடியும் பிறந்து வருவான்-அவள்
சிரித்து பேசும் அழகை காண அப்படி
தேன் சிந்தும் அழகிய......

பாவையவள் பின் செல்ல
பார்க்கும் கண்களெல்லாம்
பட்டம் சூட்டியதால் என்னை
பருவ வயதினிலே
பலரும் செய்யும் தவறிதென
புரிந்து கொண்டு - நானும்
புறப்பட்டேன் இங்கு உழைப்பதற்கு....


பகல் இரவு பாராமல்
பிறர் பெருமை பேசாமல்
பொறுமையுடன் உழைத்தமையால்
பெருமையுடன் வளர்கின்றேன்
பறந்து போன சொந்தமெல்லாம்
பந்தம் சொல்லி வந்ததிங்கு,,,,,!

காலமும் கடக்க கன்னி
உன் நினைவில் மீண்டும்,,,,
நீ சிரித்து பேசும் புன்னகைகண்டு
நரகாசுரன் மீண்டும் பிறந்திட்டாலும்
நான் வதம் செய்து உன்னை
மணம் முடிக்க தயாரடி


இந்நாளை நம் மண நாளாக்க
முன்னாளில் கண்ட கனவை
இத்திருநாளில் நிறைவேற்ற
வந்து விடேன் கொண்டாடுவோம்- நாம்!
ஊர் போற்றும் தல தீபாவளியாக இதை!


உற்ற துணை தான் இருந்து
உறுதி மொழி பல தந்து
ஊர் வாயை மூடுதற்காய் - என்
உணர்வுகளுக்கு உரமூட்டி
உடலுக்கு உயிர் கொடுத்து
உலகத்திலோர் உத்தமனாய்
உயர்ந்திட காரணமாய் இருந்த - என்னவளே!
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று,,,,,,,,,,,!

Sunday, October 19, 2014

தோழியவள் வலி{ரி}கள் படித்தேன்!


"வளி மேல் செவி வைத்து
விழியில் கண்ணீருடன்"
காத்திருந்து காதல் செய்து
கவிவடித்த சகோதரி அவள்
கவி படிக்க,,,,,,,!


விழி எங்கும் வலி நிரம்பி
வழிந்தது கண்ணீர் துளிகள்
எப்படி சொல்வது காதலை விட
கவிதையை விரும்பி இருப்பாள்
போலும் கன்னி அவள் நிலை
அன்று நான் கண்டிருந்தால்
தற்கொலை என்று உருவெடுத்து
சேர்த்து வைத்திருப்பேன் அவர் காதலை,,,!


விழி முழுதும் கண்ணீர் சிந்த
வித விதமான வரிகளை
விரும்பி நானும் படித்தேன் இன்று
விண்ணும் ஒரு தடவை
மண்ணை நினைத்து
கண்ணீர் சிந்தி இருக்கும்-"அரசி"
அவள் கவி வரிகள் படித்திருந்தால்,,,,!


காதலனையும்,காலணியையும்
காற்றையும்,மலரையும்,மரத்தையும்
காதல் செய்தவளை காலன் அவனும்
கண்ணீரையும் காதல் செய்து பார் என்றுதான்
பிரித்து வைத்தான் போலே காதலை-தோழியவள்
வலி வரி கண்டு விழி நீர் சிந்துகின்றேன் நான் 


என் காதலும் என்ன ஆகுமோ
தோழி இவள் காதல் போலே
கவிதையோடு மட்டும் உறவாடுமோ
இல்லை கடைசி வரை உடன் வருமோ
புரியாத புதிரை எண்ணி ஒரு கண்ணீர் துளி 


வரிகள் என்று நோக்கிதான்
வம்பிழுக்க நானும் படித்தேன்-அவள்
வலிகளை மட்டுமே வரிகளாய்
வடித்திருப்பதை அறியாமலே....!
சிவப்பு ரோஜா சில்லினுள்ளே சிக்கி
தவிப்பது போல ஆனது என் உள்ளம்,,,!

பாதி நிலவில் பாச முகம்!


சிறுவயதில் காதல் கொண்டு
உன் கணவனோடு நீயும் சென்று
அழகிய வாழ்வினை இனிமையாய் தொடங்க
ஜயிரண்டு மாதத்திலே அழகிய
நடச்திரமாய் அவதரித்தேன்
நானும் என்று அவனி முழுக்க சொல்வாயே
அலைவரிசை நீ போட்டு ,,,,,,,!

 
பட்டினியாய் நீ இருந்து
என் பசி தீர்க்கும் போது
அறியவில்லை பத்தினி
உன் பரிணாமம் நானும்


பத்துப்பேர் பல்லிளிக்க 
பட்டினியில் நான் துடிதுடிக்க இன்று 
பாவம் தான் நீயும் அன்று என்று 
பட்டததே என் உள்ளத்துக்கும் இன்று

பத்தினி உன் கதை நான் சொல்ல
பட்ட மரமும் பால் சொரியுதே அம்மா.
பரதேசியாய் நான் இருக்க
பல கரங்கள் என்னை ஒதுக்கவும்
பாலகன் இவனும் என்று
பரிவோடு அனைத்தவளும்
தாயே நீ ஒருத்தி தானே ,,,,,!


எண்ணற்ற வரிகள் நான் வடித்தேன்
எண்ணிய பலவும் நான் முடித்தேன்
தாயே நீ அருகின்றி அத்தனையும்
அநாதையாய் அலைகின்றதே அம்மா!


மூன்ரெளுத்து மந்திரமாய் அம்மா
உன் பெயர் இருக்க மூவுலகம் ஆளும்
முப்பெரும் தேவியருக்கும் முதன்மையாய்
நீ இருப்பாயோ தாயே


அம்மா முழுநிலவான உன் முகத்தை
இன்று நான் பிறை நிலவிலே கண்டேனடி
பாதி முகம் தனை காட்டி
பத்தினி உன்னை நினைவூட்டி செல்கின்றதே
பகலில் கானா பாதி நிலவும்,,,,!

Friday, October 17, 2014

நட்பை நேசித்து நாயகி உன்னை சுவாசித்தேன்!


"எத்தனையோ கவிதைகள்
என்னால் எழுதப்பட்டிருக்கின்றன...!-நண்பி,
உனக்கொரு கவிதை நான்
உருவாக்கும்போதுதான் அது
ஒளிவிட்டு பிரகாசிக்கின்றது....!

எத்தனையோ முகங்கள்,
எவ்வளவோ மொழிகள்,
எல்லாம் ஒன்றிணைகின்றன
நட்பை நாம் நேசிக்கும்போது...!

எத்தனையோ துன்பங்கள்,
எவ்வளவோ கஷ்டங்கள்,
எல்லாம் மறைகின்றன
நட்பை நாம் யாசிக்கும்போது...!

தூய்மையான உள்ளத்தில்
தோன்றுகின்ற நட்பெல்லாம்
துதிக்கப்படுகின்றன...!-என்றும்,
உன்னதமாய் மதிக்கப்படுகின்றன...!

எங்கேயோ நீயும்....
இங்கே நானும்....
இணைந்தது எப்படியோ..?
காதலா இல்லை?
காமமா இல்லை?
கள்ளமற்ற நட்புதான்...!

இதை கடைசிவரை என்னால்
காப்பாற்ற முடியவில்லையடி,
மனதில் உன்னை வைத்து
மாற்றலோடு உறவாடவும் முடியல்லடி
நம்நட்பை நேசித்த காலம் சென்று
நண்பி உன்னை சுவாசிக்கும்  காலம் இது

நாளைய நாயகி நீ என்று
என் மனவாசலில் ஒரு கோட்டை
எனக்கே தெரியாமல் எழும்பி விட்டது
வார்த்தைகள்எனும்வால் கொண்டு
இடித்துரைக்காதே நம்மணவாழ் வீட்டினை,

அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை-என்று
வர்ணிக்க வார்த்தைகலற்றதடி
உயிரான உன் நட்பும் உறவான என் காதலும்!

Thursday, October 16, 2014

மந்திர பார்வையின் தந்திரம் என்னடி?

சுந்தரமானவளே!
இந்திரன் பொன்ரதமே! - உன்
மந்திரப் புன்னகையால் - எனை
எந்திரமாகவே விந்தைசெய்
விண்மதியே!


உன் புன்னகை வாங்கித்தானோ
சில்லரைகள் சிணுங்கிக் கொள்கின்றன
அடம்பிடிக்கும் காக்கைகள் கூட
உன்குரல்கேட்டு ஆனந்தம் கொள்கின்றன
நீ இடம்பிடிக்க ஓரிடம் கேட்டால்
என் இருதயம் கூட இடம்மாறி நின்று
போரிடப்பாக்கிறதே!


உன் வெட்கத்தை உரித்தா
செவ்வானம் இங்கே
சேலையுடுத்திக் கொள்கிறது
உன் செவ்விதழ் பட்டா
மின்சாரம் தன்னை
மிகைப்படுத்திக் கொள்கிள்கின்றது!


எனக்கெனப் பிறந்தவளே – என்
உயிரையும் கறந்தவளே
மனச்சுவர் ஆயிடையில் என்னில்
தினம் தினம் பிறப்பவளே!

காலாற நீ நடக்க
கருங்குவளை மலர் பறிப்பேன்
வாயாற நீ படிக்க
வண்ணத்தமிழ்  யான் சமைப்பேன்


தெவிட்டாத புன்னகையில்
பித்தாகி நான் மரிப்பேன் - பின்
தேனூறும் வார்த்தையிலே
மொட்டாக மீழ் துளிர்ப்பேன்.
இப்பொழுது சொல்லேன்-உன்

மந்திர பார்வையின்
தந்திரம் தான் என்ன?

Wednesday, October 15, 2014

புதிரான என் வாழ்வு.!


புரியவில்லை அன்பே...!
நீ நடத்தும் நாடகங்கள்
ஒவ்வொன்றும்...!
மறந்து விட்டேன் உன்னை...!
என்று தான் சொல்ல
நினைக்கிறேன்?
ஆனால் சொல்லி முடிக்கும்
மறுகணம்
நினைவில் நீ...!
பிரிந்து விட்ட பின்னும் உன் பெயர்
படித்தால் உள்ளம்
புல்லரிப்பது என்னவோ உண்மை தான்
அன்பே...!
இந்த முறை உன்
பிரிவு என்னை ஸ்தம்பிக்க
செய்யவில்லை...
காரணம் நீ என்னுள்
விட்டு சென்ற ரணங்கள்...!
போகும் போக்கில்
புரியவைத்து விட்டாய்
வாழ்வு பொய் என்று...

உன் இதழ் சுவையில் என் உயிர்.!



இனியவளே ..நீ ..!
சொற்சுவையோ..

பொற்சுவையோ ...
விளங்கவில்லையடி எனக்கு ...!


இயல் என்றேன் ..

இசை என்றேன் ..
இவையிரண்டும் 

உன் விழிகள்என்றேன் ..
நடத்திக்காட்டினாய் ...

ஒரு காதல் நாடகம் ..!

உன் இதழ் சுவை கண்டு ...
முக்கனியும் துவர்ப்பென்றேன் ..
உன்கொடிஇடை நடனம்கண்டு ..
முத்தமிழும் உன்னிடம் 

சிரிக்க கண்டேன் ..!
விண் கண்டேன்..

மண் கண்டேன் ..
பொன் கண்டேன்...

பண் கண்டேன் ...-பின் பெண் 
உனைக்கண்டேன் பேரழகில-நான் 
கண்டதை எல்லாம் கனா என்றேன் ..!

மலர் உனைக்கொய்ய..

காதல் வாள் எடுத்தேன் ..
கொய்த என் இதயத்தை ..
உன் விழிகளுக்குள் வீசிவிட்டு ...
இதோ உன் இதயசிறையில் இடம்கேட்டு ..
இரவுப்பகலாய் தவம் கிடக்கின்றேன் ..!
வரம் கேட்கிறேன் கண்னசைவிலாவது..
என்னை சிறைப்பிடித்து போயேன் ..!
உன் இதழ் சுவையில் என் உயிர் ..
உனைதேடி உயிரோடு பிரிந்ததடி ..!

Monday, October 13, 2014

அனாதையாய் நான் ஒருவன்.......!

அறியாத வயதில் வந்த போது
அழுகை வந்தது
அறிந்த வயதில் கேட்டதும்
பயம் வந்தது
ஆசை கொண்ட போது
எதிர்ப்பு வந்தது
அடி பணிந்து மறந்த போது
அழுகை வந்தது
அன்பிலான் எனை வெறுத்த
போது ஏக்கம் வந்தது
ஆளுக்கொரு கரையில் வாடும்
போது விரக்தி தான் வந்தது
அன்பினை புரிந்த யாரும் சேர்த்து
வைப்பர் என்ற ஆவலுடன்
அனாதையாய் நான் ஒருவன்.......!

கல்லறை உணர்த்திய காதல்...!

யாரிடம் கண்ணில் படாத ஈரம்,
காதலை தொடங்கியவுடன் பட்டது... !!!
யாரிடம் சொல்லாத காதல்,
அவளை பார்த்தவுடன் சொல்ல துடித்தது... !!!
யாரிடம் வாழத வாழ்க்கை,
அவளுகாக் மட்டுமே வாழ ஏங்கியது... !!!

யாருக்காவும் விடாத உயிரை
அவளுகாவே உயிரை மறித்தது... !!!
யாருக்காக கொடுக்காத உடலை
கல்லறைக்கு கொடுத்தது
அவள் கொண்டு வந்த மலரகாகவே
என் காதல் உண்மை என்று அவளுக்கு உணர்த்தியது... !!!

பொடிப்பையன் என் காதல்...!!

பள்ளிக்கூட புத்தகமும்
பல்லைக் காட்டி சிரித்தது,
எல்லாப் பக்கத்திலும்
உன்னைத் தேடிய போது...!!

அழிப்பான்கள் எல்லாம்
அழுகத் தொடங்கியது,
உன் பெயரை தவறாக கிறுக்கி
மீண்டும் அழித்தபோது...!!

பத்துக் காசுகள் எல்லாம்
பயத்தில் நடுங்கியது,
உனக்கு மிட்டாய் வாங்க
கடையில் விற்கப்படுவோம் என்று...!!

பாதரசம் என்ன
பாவம் செய்ததோ..??
எட்டாத கண்ணாடியில் உனக்காக
எகிறித் தலை சீவும் போது...!!!

அவளுக்கு கவிதை எழுதி
என் காதல் சொல்லலாம்..!!
ஆனால், பாடம் எழுதித் தரும்
அம்மாவிடம் கவிதை எழுதச் சொல்லி
எப்படி கேட்பது..??

எனக்காக ஒரு நிமிடம் !


சிற்பத்தின் எழில் போல
சிந்தைதனை மயக்கி எனைச்
சீர்குலைத்த பெண்மயிலே !

சிறகெடுத்துப் பறந்துவா


தென்னகத்துக் குலமகளாம்
தேனாற்றின் பெருந்துளியாம்
என்னிதயத் திருவிளக்கே
என்மண்ணின் ஒளிவடிவே !


எனக்காக ஒரு நிமிடம்....
ஏந்திழையே தருவாயா ?


முத்தமிழ்க் கலவை போல
முக்கனியின் சுவை போல
முப்பாலின் தரம் போல
முத்தெழிலே நீ இருக்க....


எக்காலம் தனில்
என் ஏக்கம் தணியுமினி ?
எப்பொழுதில் என் விழியை
எட்டிடும் உறக்கமதே ....


எனக்காக ஒரு நிமிடம் ...
என்னோடு பேசு கிளியே !


உன் பார்வை மயக்கத்தில்
உள்ளம் கிறங்கிப் போனதடி
உன் மொழியின் இனிமையிலே
உலகம் ஏனோ மறந்ததடி


மெல்லிடையை வளைத்து நீயும்
மெத்தெனவே அடியெடுத்து
பொத்தெனவே என் நெஞ்சை
பொசுக்கி விட்டுப் போகின்றாய்


எனக்காக ஒரு நிமிடம் ....
என்னவளே தாராயோ !


தத்தை போல பேசி நீயும்
தத்தளிப்பில் என்னை ஆழ்த்தி
தமிழாகிச் சுரந்து என்னுள் ஏனோ
தவழுகின்றாய் கவிதை உருவில்


நித்தம் எனக்கு மரணமடி
நித்திரையில் உந்தன் கனவு
பொற்கொடியே போதுமடி
பூங்கொடியே என்னைப் பாராய்


எனக்காக ஒரு நிமிடம் ....
கண்ணெதிரே வந்து விடு நான்
கண்மூடி நாளாச்சு........!

அம்மாவின் பொய்கள்!

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் தானும் செய்தால் சாமி
கண்னை குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

அடங்காத (என்) ஆசைகள்!

ஆசையாகத்தானிருக்கிறது!
ஆசைகளை எல்லாம்
உன்னிடம் சொல்லிவிட
ஆசையாகத்தானிருக்கிறது!

விடியல் தலை காட்டும் வரை
மடியில் தலை சாய்த்துக்கொண்டு;
நொடியும் இடைவெளியின்றி,
பேசிக்கொண்டிருக்க
ஆசையாகத்தானிருக்கிறது!


மங்கிய நிலவொளியில்
பொங்கிய சாதத்தை
இங்கிதம் பார்க்காமல்ஊட்டிவிட;
ஆசையாகத்தானிருக்கிறது!


கண்ணிறம் கருப்பல்லவா!
செந்நிறம் உதடல்லவா!!
பொன்னிறம் மேனியல்லவா!!!
உன்னைப் பாடிவிட
ஆசையாகத்தானிருக்கிறது!


சோர்வோடு நீ இருக்கும்போது
மார்போடு அனைத்துக்கொண்டு;
உயிரோடு கலந்த உன்னைப்
பரிவொடு விசாரிக்க
ஆசையாகத்தானிருக்கிறது!


பின்னால் உன்னை அமரவைத்து
முன்னால் போகும் வாகனங்களை
என்னால் முடிந்த மட்டும்
விரட்டிப் பிடிக்க
ஆசையாகத்தானிருக்கிறது!


குளித்து விட்டு நீ தலை துவட்ட
தௌ¤த்து விழும் அந்த துளியில்
சிலிர்த்துக்கொண்டு நான் எழுந்து,
அப்படியே உன்னைக் கட்டிக்கொள்ள
ஆசையாகத்தானிருக்கிறது!


காதருகில் வைத்த அலாரம்
12 மணி இரவில் கதற
அலற லோடு நீ எழும்
அந்த தருணத்தில்
பிறந்த நாள் வாழ்த்துக் கூறி,
முத்தமிட
ஆசையாகத்தானிருக்கிறது!


நகத்தை நீ கடிக்கும்போது
நானும் அப்படியே செய்து
முகத்தை நீ திருப்பும்போது
நானும் அப்படியே செய்து
கோபத்தில் இருக்கும்
உன்னை மேலும் கோபமூட்ட
ஆசையாகத்தானிருக்கிறது!

 

நீ சிரிக்கின்றபோது
உனக்கு பின்பாகவும்;
நீ அழுகின்றபோது
உனக்கு முன்பாகவும்;
நீ நடக்கின்றபோது
உனக்கு பக்கமாகவும்
என்றுமே காவலனாயிருக்க
ஆசையாகத்தானிருக்கிறது!
 

 ஆசையாகத்தானிருக்கிறது!
ஆசைகள் எல்லாம்
உன்னுடன் நடந்துவிட,
ஆசையாகத்தானிருக்கிறது!