Monday, October 13, 2014

அகிலாண்ட நாயகி ஆதி பராசக்தி!

அடுக்கு அடுக்காய் படிகள் கட்டி
மிடுக்காய் பெண்கள் உடையணிந்தே-குடுகுடுவென
அண்டை வீட்டோரை அழைத்துக் காண்பித்து
சுண்டல் வழங்கும் திரு நாள் இன்று
பாசி போன்ற புன்னகை கொண்ட
காசியின் சிவன் மனைவி-ஊசி
மேலினில் தவம் கொண்டு அருள்
பாலிக்கும் நன் நாள் இது!
நவராத்திரி பொழுதின்
முதல் பொழுதாம் சக்தி தானே
பாயும் புலிகளும் பதுங்கியது வீரத்திலோ!
பதுங்கிய சிங்கமும் பாய்ந்தது உன் வீரத்திலோ?
சிங்க நடை நீ போட்டு சீறிப்பாயும் புலி ஏறி
சீக்கிரம் நீ வந்திருந்தாள்
சிங்க கொடி சிதறி இருக்கும்-சிம்மாசனம்
ஏறி இருக்கும்! சீறிபாயும் புலியும் அல்லோ!


பால்குடி குழந்தைகளும்
பாவம் பல பத்தினிகளும்
கிளிக்கபட்டனரடி தாறுமாறாக!
உடுக்கை அடித்தால் தான்
உத்தமி நீ வருவாயோ?
உலகமே சிதறும் வேலை-
உறங்கித்தான் போனாயோ?

இவ் இனிய நான் நாளில்
இனிதாய் ஒரு வரம் கேட்பேன்!
இனி ஒரு போர் வேண்டாம்
எமக்கொரு இடம் கொடு
இல்லறம் என்றும் நல்லறமாக.
இன்னல் மறந்து இதயம் துறந்து
பராசக்தி உனக்காக பலகவிகள் -நாம்
வடிக்க வையகம் போற்றும் வாழ்வு கொடு.

0 comments:

Post a Comment