Monday, October 13, 2014

துர்க்கை அவள் துணை வேண்டும்!


கோலமயில் கூவுகையில்
கொஞ்சுதமிழ் நெஞ்சினிலே
பாலெனவெ தேனெனவே
பாயவேனும் பராசக்தி !
ஞாலமிதில் ஊருகின்ற
ஞானமெல்லாம் ஒன்றாக்கி
பாலகனாம் நான்பாடப்

பக்திவேனும் பராசக்தி !

தேனருவி போலெனக்கு
தெவிட்டாத கவியருவி
நானினைக்கும் நேரமெல்லாம்
நல்கவேனும் பராசக்தி !


ஊனடைந்த உயிர்மட்டும்
உற்சாகமாய்ச் சென்று
வானடைந்து நின்புகழை
வாழ்த்தவேணும் பராசக்தி!


மாதர்முகங் கண்டுவிட்டால்
மனதுள்ளே கவிதைமலர்
காதலோடு பூத்துமணம்
கமழவேனும் பராசக்தி !


ஆதவனை கவிதைகளால்
அனைத்திழுக்க அன்னையே!நீ
சாதகமாய் அருளதனைச்
சாற்றவேனும் பராசக்தி !


சித்தன் என் கவிகள் கண்டு
சிவன் அவனும் கருணை கொண்டு
சிதம்பரத்தை விட்டிறங்கி- என்
சிறு மாடி வீடேறி விரைந்தோடி
வந்திடும் வல்லமை தந்திடம்மா பராசக்தி!

0 comments:

Post a Comment