Monday, October 13, 2014

கலைமகளுக்கோர் கவி!

புத்தகத்துள் உறைபவளே சரஸ்வதியாள்
பேரறிவை அறிபவளே சரஸ்வதியாள்
பேரு பதினாறும் தரும் குணவதியாள்
நூலறிவை தருபவளாம் சரஸ்வதியாள்
ஈரேழு உலகம் போற்றும் பேருடையாள்!
அலைகளின் வடிவாக தோன்றுகிறாள்
கலைமகள் என்னைபாட துண்டுகிறாள்.
மரகத வீணை தனை ஏந்தியவள்
மனதினில் மகிழ்ச்சியினை ஊட்டுகிறாள்
வீணையின் நாதம் இசைப்பவளே
வீண் வாதம் தனை தீர்பவளே!
ஆத்திகன் முதல் நாத்திகன் வரை
அம்பிகையே உன் அருள் இருக்கே!
அடியேனும் உன் அடிமை-என்னை
ஆக்க வேண்டும் ஒரு கவிஞன்
எள்ளி நகையட்டும் என்னிதய உறவுக்கும்-என்
கவியில் உரைக்கும் படி சொல்ல வேண்டும்
உன்னுடைய புகழ் தனை


உண்மையின் ஒலிவடிவமே!
உயிரின் மறுவடிவமே!
செல்வத்துள் செல்வமாய்-கல்விக்
கலையோடு நீ இருக்க
கற்பித்து அருளம்மா வழி தனை
கவி பல நான் படிக்க!

0 comments:

Post a Comment