Monday, October 13, 2014

அஷ்டலட்சுமியாய் அன்னையவள்!

முப்பெரும் தேவியரும் கொலுவிருக்க
முத்தமிழ் கவிஞர்களும்
முன்னின்று வாழ்த்துரைக்க!

ஈடில்லா இந் நாளில்
இயம்புகின்றேன் சிறு கவியும்
!


ஆயிரம் நாமங்களை உணர்த்துபவள் அவளே!
தேவி கடைக்கண்களால் ஏழுலோகம்
காத்தருள்பவளும் அவளே!
மலரினுள் மகரந்தமாய்
சிரித்துடுவாள் அவளே!
அலைமகள் தும்பிசூழும்
பங்கயத்து நாயகியும் அவளே!
மஞ்சளிலே நிறைந்திருப்பாள்
மங்களவல்லி அவேளே!
மங்கலக் குங்குமத்தில் குதூகலிப்பாள்
கோமளவல்லியும் அவளே!
செவ்வரளிப் பூவனத்தில்
கொலுவிருப்பாள் அவளே!-
மங்கலங்கள் பொங்கிடவும்!
வரமருளும் ஆதி லட்சுமியும் அவளே!


தங்கத்தின் தாற்பரியம் அவளே!
தரணி வாழ் உயிர்களின் தாகமும் அவளே!
மங்கள முகமொழி அவளே!
மதியதன் மறுவடிவமும் அவளே!


ஐம்பெறும் யோதியாய் -ஆதி லட்சுமி அவளே!
தனவானின் தாயானதால்- தன இலட்சுமியும் அவளே!
மணக்கும் மங்களதால் -சந்தான இலட்சுமி அவளே!
வறியோர் பசி போக்கி -தானிய இலட்சுமியும் அவளே!
வேங்கையின் மறுவடிவாய் -வீர இலட்சுமி அவளே!
சிவனோடு சரிபாதியால் -மகா இலட்சுமியும் அவளே!
கமலாசனம் வீற்றிருந்து நீயும் -கஜ இலட்சுமி அவளே!
விக்கினங்களை தீர்த்த -விஜய இலட்சுமியும் அவளே


அஷ்டலட்சுமி யாய் தோன்றி
அகிலமாலும் அம்பிகையும் அவளே!
அகிலாண்டேஸ்வரியும் அவளே!!!!!!!

0 comments:

Post a Comment