Tuesday, October 21, 2014

தீபாவளி திருநாளில் என் நிலவுக்கொரு வரி!

இரவின் மடியில்
நிலவின் ஒளியில்
நிழலாய் விழுந்த மலரே...

உன் கவிதை மொழியில்
கவலை மறந்து இனிது
துயிலும் குயில் நானே...

வருடம் ஒன்று கடந்து
வயது ஒன்று கூடியதால் - நானும்
பருவ வயததைடந்து
பார்ப்பதெல்லாம் ரசித்தேனன்று...


மரித்து போன நரகாசுரனும்
மறுபடியும் பிறந்து வருவான்-அவள்
சிரித்து பேசும் அழகை காண அப்படி
தேன் சிந்தும் அழகிய......

பாவையவள் பின் செல்ல
பார்க்கும் கண்களெல்லாம்
பட்டம் சூட்டியதால் என்னை
பருவ வயதினிலே
பலரும் செய்யும் தவறிதென
புரிந்து கொண்டு - நானும்
புறப்பட்டேன் இங்கு உழைப்பதற்கு....


பகல் இரவு பாராமல்
பிறர் பெருமை பேசாமல்
பொறுமையுடன் உழைத்தமையால்
பெருமையுடன் வளர்கின்றேன்
பறந்து போன சொந்தமெல்லாம்
பந்தம் சொல்லி வந்ததிங்கு,,,,,!

காலமும் கடக்க கன்னி
உன் நினைவில் மீண்டும்,,,,
நீ சிரித்து பேசும் புன்னகைகண்டு
நரகாசுரன் மீண்டும் பிறந்திட்டாலும்
நான் வதம் செய்து உன்னை
மணம் முடிக்க தயாரடி


இந்நாளை நம் மண நாளாக்க
முன்னாளில் கண்ட கனவை
இத்திருநாளில் நிறைவேற்ற
வந்து விடேன் கொண்டாடுவோம்- நாம்!
ஊர் போற்றும் தல தீபாவளியாக இதை!


உற்ற துணை தான் இருந்து
உறுதி மொழி பல தந்து
ஊர் வாயை மூடுதற்காய் - என்
உணர்வுகளுக்கு உரமூட்டி
உடலுக்கு உயிர் கொடுத்து
உலகத்திலோர் உத்தமனாய்
உயர்ந்திட காரணமாய் இருந்த - என்னவளே!
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று,,,,,,,,,,,!

0 comments:

Post a Comment