Wednesday, October 29, 2014

என் தாய்க்கு வாய்க்கும் மருமகள்.!

தெம்மாங்கு பாடி தேவதாஸ்
ஆக ஆசை இல்லை
தேன் மதுர தமிழோசையில்-தேன்

காவியம் பாடிடவும் தெரியவில்லை
இருந்தும் வடிக்கின்றேன்
என்னவளுக்கு ஒரு காவியம்,,!


மகத நாட்டு மன்னன் மகன் ,
இயக்கர் இன தலைவியை மணந்தோ
ஈழ மகுடம் சூடிக் கொண்டானடி?
என் இதய கனியே உன்னை மணந்தால்,
நான் எதற்கு மன்னன் ஆவது.?

பண்டார வன்னியன் ஆண்ட
பசுமை நிலத்தில் பவனி வருபவளே!
பாவபட்ட உள்ளம் ஒன்று-உனை
நினைத்து பரிதவிக்கின்றது,
பறந்தோடி வந்தால் குறை வந்து விடுமென்று
பொறுத்திருக்க சொன்னாயோ?


பொத்தி வைத்த ஆசை எல்லாம்,
உன் தமக்கையிடம் மொழிந்து விட்டேன்!
பொல்லாப்பு வந்து விட்டால்
பொறுமை இழந்திடுவேன்டி!


ஆண்டிரண்டு ஆகட்டும் அதன் பின்
பார்போம் என்று அமைதியாக சொன்னயே!-என்
அன்னை அவள் நிலை கண்டு
அதை நானும் ஏற்றேனடி

வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால்
எள்ளும் எண்ணையாகி வந்திடும் தான்!
என் மாமா/மி மட்டும் என்ன விதி விலக்கா?


கார்த்திகை வந்தால் கன்னி-நம்
உறவு வருடம் ஒன்று பூர்த்தி ஆகின்றதே!
நினைவிருந்தால் நிலை மாறாமல் நீ இரு
நிச்சயம் மணவாட்டி ஆக்குவேன்-உன்னை
என் அரண்மனைக்கு அரசி ஆக்கும் நாள்-வெகு
தொலைவில் தான் இருந்தும் பொறுத்திரு
அயல் தேசம் நான் சென்றால்
அதுவும் கிட்டி விடும்...


காத்திரு கன்னியே காலமெல்லாம்
துணை வருவேன்!
அவசரத்தில் முடிவெடுக்காதே
முத்தெடுப்பது எளிதல்ல!
முக்குளிக்க நாள் வரட்டும்!

பொன்னி உன் நினைவினாலே!
பொங்கி வருகின்றது கண்ணீரெல்லாம்-கை
குட்டை கனமாகியது காரணம் நீ என்பதால்!


தென்றலைப் போல நடப்பவள், நீ
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்,நீ
செந்தமிழ் நாட்டு திருமகள்,நீ
எந்தன் தாய்க்கு வாய்க்கும் மருமகள்.! நீ

பெயர் சொன்னாலோ பெரும்
பிரச்சணை சூழ்ந்து விடும்
தெரிந்தவர்கள் மொழிந்திடட்டும்
இலங்கை திரு நாட்டில்
இதய பூமியில் வசிக்கும்
என்னவள் பெயரை!

0 comments:

Post a Comment