Friday, October 17, 2014

நட்பை நேசித்து நாயகி உன்னை சுவாசித்தேன்!


"எத்தனையோ கவிதைகள்
என்னால் எழுதப்பட்டிருக்கின்றன...!-நண்பி,
உனக்கொரு கவிதை நான்
உருவாக்கும்போதுதான் அது
ஒளிவிட்டு பிரகாசிக்கின்றது....!

எத்தனையோ முகங்கள்,
எவ்வளவோ மொழிகள்,
எல்லாம் ஒன்றிணைகின்றன
நட்பை நாம் நேசிக்கும்போது...!

எத்தனையோ துன்பங்கள்,
எவ்வளவோ கஷ்டங்கள்,
எல்லாம் மறைகின்றன
நட்பை நாம் யாசிக்கும்போது...!

தூய்மையான உள்ளத்தில்
தோன்றுகின்ற நட்பெல்லாம்
துதிக்கப்படுகின்றன...!-என்றும்,
உன்னதமாய் மதிக்கப்படுகின்றன...!

எங்கேயோ நீயும்....
இங்கே நானும்....
இணைந்தது எப்படியோ..?
காதலா இல்லை?
காமமா இல்லை?
கள்ளமற்ற நட்புதான்...!

இதை கடைசிவரை என்னால்
காப்பாற்ற முடியவில்லையடி,
மனதில் உன்னை வைத்து
மாற்றலோடு உறவாடவும் முடியல்லடி
நம்நட்பை நேசித்த காலம் சென்று
நண்பி உன்னை சுவாசிக்கும்  காலம் இது

நாளைய நாயகி நீ என்று
என் மனவாசலில் ஒரு கோட்டை
எனக்கே தெரியாமல் எழும்பி விட்டது
வார்த்தைகள்எனும்வால் கொண்டு
இடித்துரைக்காதே நம்மணவாழ் வீட்டினை,

அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை-என்று
வர்ணிக்க வார்த்தைகலற்றதடி
உயிரான உன் நட்பும் உறவான என் காதலும்!

0 comments:

Post a Comment