Monday, October 13, 2014

நானுன்னை காதலிக்கிறேன்!

"ஏன் ஜீனியஸ்...."
"ஏனென்றால் நானுன்னை
காதலிக்கிறேன்"

கேட்கப்படும் உன்
கேள்விகளுக்கெல்லாம் ஒரே
பதிலாக சொல்ல முடியவில்லை
நேசிக்கிறாயா
என் நினைவால்
தேய்ந்துகொண்டிருக்கிறாயா,
பாசம் வைத்திருக்கிறாயா,
என் ஆழ்ந்த இதயத்தின்
இருள் பள்ளத்தாக்குகளில்
ஊறும் என் அன்பு
உன்னிடம் அடைக்கலமாக
உன் மனக்கதவு
திறந்திருக்கிறதா,
என்ன செய்துகொண்டிருக்கிறாய்
என்ற உறுதிசெய்ய முடியாத அவஸ்தையில்
உயிர் தீண்டிகொண்டுதானிருக்கிறாய் நீ!
என் காதலை
ஏற்பாயா
எதிர்ப்பாயா
எதுவெனினும் உன்னை
பார்க்காத நாளும்
நினைக்காத நெஞ்சமும்
நெருப்பில் வேகட்டும்!

0 comments:

Post a Comment