Monday, October 13, 2014

ஐஸ்வரியம் கொடுத்திடம்மா அஷ்டலக்சுமி!

மங்களம் பொழியும் மாதவியே
என்றும் உன் மகனாக நான் இருந்து
பாடுவேன் பல கவியே!
படித்து நீ கொடுத்திடுவாய் -வறியோர்
வறுமை நேக்கும் சில வரங்கள்
நாயகிகள் வளம் வந்து
நவராத்திரி நோன்பிருந்து
நாடு வளம் முதல் தமது சுகம் வரை
வேண்டுவாரோ பெரும் வரங்கள்

வேதனைகள் நீங்கிடவும்
வெண்பொங்கல் படைத்திடவும்
வேதங்கள் ஓதி-தினம்
தாயே உன்னை வணங்கிடவும்
வேண்டுமடி கையில் பணம்
அதற்க்கும் உண்டு[வேதனைகள்
பல போக்கிடும் குணம்

வேப்பிலை காரி அவளும்
வீரம் தான் கொடுத்திடுவாள்
அஷ்டலக்சுமி நீயும்
ஐஸ்வரியம் கொடுத்திடம்மா

உத்தமியே நாயகியே
உலகாளும் பத்தினியே!
தனலட்சுமி தாயே நீயும்
தங்க ரதமேறி தரணியிலே
வலம் தான் வந்தால்
தவிக்கும் உள்ளங்களை
தான் கண்டு உதவிடம்மா!
உத்தமி நீயும் என்று
ஊர் மக்கள் போற்றிடவும்
உழைப்போர் உள்ளம் எங்கும்
உன் செல்வம் செழித்திடவும்
ஈடில்லா இந் நாளில்
ஈன்ற வரம் கொடுத்திடம்மா!

0 comments:

Post a Comment