Monday, October 13, 2014

அபயமளித்தாள் அந்த கலைமகள்!

என் தலைமேல் சூழ்ந்த
கார்மேக விதியைக் கண்டு
கலங்கிப்போய் கண்ணயர்ந்தேன்!
அங்கே ஓர் அற்புத ஒளி!
யார் அது?
கையில்வீணையுடன்
வெள்ளுடைக் கோலத்தில்
வெண்மேகத்திடையே ஒரு
பெண் மேகம்!
மெல்ல இறங்கி என் தலை கோதி
வீணையே மீட்டும் குரலில் கேட்டாள்!



'என்ன மகனே ஏன் கலக்கம்?
கலைசூழ்ந்த உன் முகம்
களைந்து போனது எவ்விதம் என கேட்க?'

கல்விக்கு அதிபதியே
கலைவாணி உனை போற்ற
கவி வரி தேடி பார்க்கின்றேன்
கலையமுதே உனை வாழ்த்த,
கண் கொண்டு நோக்குகின்றேன்
கவிதை தான் எட்டவில்லை-காரணம்
கலைவாணி நீயுமென் கிட்ட இல்லையே!


குரைகடல் ஓடியோர்
குதிதங்கு முத்தெடுக்க
திரவியம் தேடி நானும்
தினம் தினம் வடிக்கிறேன் தேவி
திகட்டாத உன் அழகை

அதிபதியே ஆதி சக்தி
அகிலம் துதிக்கும் இந்நாளில்
ஆண்டவரெல்லாம் அடங்கி போக
ஆடவரெல்லாம் அமைதி காண
பக்த கோடிகள் பக்கம் நின்று
பக்தன் நானும் வேண்டுகின்றேன்!

அடிமை நீக்கும் அறிவுச்செல்வம்
அனைவரும் அடைய விரும்பும் செல்வம்
ஆதி சிவனும் அடையா அதிசயச்செல்வம்
ஆசான் சொல்லும் கல்வி செல்வம்
அருள வேண்டும் அனைவருக்கும்!
தாயே உன் அழியா செல்வம்!
அப்போது
"அபயமளித்தாள் அந்த கலைமகள்!"
உன்னால் முடியாதது எதுவுமில்லை
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருந்தாலும்
துன்பங்கள் உன்னை வாட்டி எடுத்தாலும்
வறுமை உன்னை புரட்டிப் போட்டாலும்

எனது உணர்வை ரசித்து மகிழ்ந்து
உணர்வுகளைக் கனவுகளால் வண்ணமாக்கி
என் செல்லச் சிணுங்கலுக்கு
பின்பாட்டு பாடிய உனக்கு!
'


விதியையே உனக்குக் கீழ்படியும் சேவகனாக்கி
நீ விதித்த வரம் அனைத்தும் நான் கொடுப்பேன்!
எழு மகனே! ஏழுலகம் உன் காலடியில்!''

0 comments:

Post a Comment