Wednesday, October 29, 2014

தாய்த்தமிழ்!

நீ கற்றுக்கொடுத்த தமிழ்மொழியால்
உன்மகனான நான் – தமிழ்
இலக்கியத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதைப்

பார் அம்மா...!


பல ஆண்டுகளாய் 

நம்மிருவரையும் பிரித்துவைத்தே
வேடிக்கை பார்க்கிறது காலம்!
பிணந்தின்னும் கழுகுகள் போல்
பணம்பண்ணும எந்திரங்களாய்
மாற்றிவிட்டது காலம்!

பசிதூக்கத்தை மறக்கவைத்து
பாசத்தைத் துறக்கவைத்து
உணர்வுகளை இழக்கவைத்து
மனிதநேயத்தை மறக்கவைத்து
மரக்கட்டைகள் போல
மாற்றிவிட்டது காலம்!


மீசை முளைத்தபின்னும் – முகத்தில்
முடி முளைத்தபின்னும்
உருவமது மாறியபின்னும் –என்
பருவமது மாறியபின்னும்
கலப்படமில்லாத தாய்ப்பாலைப்போன்ற
பரிசுத்தமான உன் அன்பைத்தேடும்
ஈர் பத்து வயது பாலகனாய் நான்!!

0 comments:

Post a Comment