Sunday, October 26, 2014

"கத்தி"யின் காதலி "பூஜை"யின் புதுமொழி தோழி!


ஆருயிர் நண்பி என்றும்
ஆரா துயர் தோழி என்றும்
உன்னை நான் பார்த்து வந்தேன்


நீ செய்யும் தவறெல்லாம்
கண்டு தட்டி நான் கேட்க
சந்தேகம் கொள்கின்றாய் என்று
சடுதியிலே சொல்கின்றாயே


என் சொந்தம் பல உண்டு
உனக்கெதுக்கு வீண் வேலை
என்று நீ கேட்டிருந்தால்
ஏற்று நான் சென்றிருப்பேன்.


எடுத்தெறிந்து பேசி விட்டு
"‪#‎கத்தி‬",முதல் "‪#‎பூஜை‬" வரை
கண்கொள்ளா காட்சி பார்க்க
பணம் கண்டு சென்றாயோ?


வேலை ஏதும் இன்றி
வெளிநாடு தானே சென்று
அரை வயிற்று கஞ்சி ஊத்த
உன் அப்பன் படும் பாடு
அறிந்துதான் கேட்டாயோ


அம்மாவுடன் சண்டைபிடித்து
அலங்கோலமாய் ஆடையணிந்தாய்
உணவருந்தா விட்டாலும்
உதட்டுச் சாயம் பூசினாய்
காலம் தாழ்த்தி வீடு வந்து
காரணம் கேட்க கோயில் என்றாய்
கைபேசி தான் அதன் பெயர்-ஆனால்
எந்நேரமும் உன் காதோரம்.


எடுத்தெறிந்து பேசி விட்டு
தியேட்டருக்கும் செல்கின்றாயா?
செல்லடி செல்லமான தோழியே


துன்பம் என்று வரும்போது
துவண்டு நீ திரியும் போதும்-என்னை
துரோகி என்று அழைத்த உன்
வாயால் துணை வா என்றலைப்பாய்


அவ்வேளை அறிந்து கொள்வாய்
நண்பனாய் நாயகனாய் -உன்
பார்வையின் துரோகியாய்
இறுதி வரை உன் துணையாக
நான் மட்டுமே வருவேன் என்று!


விட்டு சென்ற நொடியில் என்
விழி கண்ட வலிகளை
வரிகளில் திரையிட்டிருக்கேன் உன்
விழி கொண்டு பார்த்து செல்வாய் என்று!

0 comments:

Post a Comment