Monday, October 13, 2014

சகலமும் அவளே சரஸ்வதி!

சிரித்த முகமும்
செவ்வரி கண்களும்
செந்தேன் இதழும்
வெண்தா மரையும்
வீணையும் ஓலையும்
வெண்முத்து மாலையும்
சூடிடும் தேவியை நாடிடு மனமே

காரிருள் கூந்தல்
அலையென ஆகும்
இருவிண் மீன்கள்
கண்ணென ஆகும்
கோவைச் செவ்விதழ்
தேனென இனிக்கும்
தேவியின் தேகம்
தண்ணொளி நிலவு

நெஞ்சம் தாமரை
நினைவுகள் பூமழைத்
தூவிடும் நேரம்
பாயிரம் ஆகும்
வேணியை துதித்திட
வேண்டும்வரம் கிடைக்கும்
ஆனந்தம் தருமே
அவள்திரு நாமம்

செந்தமிழ் வளர்க்கும்
இயலிசை அறியும்
அன்னையின் அருளே
அறிவினை அளிக்கும்
தேவரும் போற்றும்
அவள் திருப் பாதம்
துதித்துநீ மனமே
துயர்களை வாயே.

0 comments:

Post a Comment