Sunday, October 19, 2014

தோழியவள் வலி{ரி}கள் படித்தேன்!


"வளி மேல் செவி வைத்து
விழியில் கண்ணீருடன்"
காத்திருந்து காதல் செய்து
கவிவடித்த சகோதரி அவள்
கவி படிக்க,,,,,,,!


விழி எங்கும் வலி நிரம்பி
வழிந்தது கண்ணீர் துளிகள்
எப்படி சொல்வது காதலை விட
கவிதையை விரும்பி இருப்பாள்
போலும் கன்னி அவள் நிலை
அன்று நான் கண்டிருந்தால்
தற்கொலை என்று உருவெடுத்து
சேர்த்து வைத்திருப்பேன் அவர் காதலை,,,!


விழி முழுதும் கண்ணீர் சிந்த
வித விதமான வரிகளை
விரும்பி நானும் படித்தேன் இன்று
விண்ணும் ஒரு தடவை
மண்ணை நினைத்து
கண்ணீர் சிந்தி இருக்கும்-"அரசி"
அவள் கவி வரிகள் படித்திருந்தால்,,,,!


காதலனையும்,காலணியையும்
காற்றையும்,மலரையும்,மரத்தையும்
காதல் செய்தவளை காலன் அவனும்
கண்ணீரையும் காதல் செய்து பார் என்றுதான்
பிரித்து வைத்தான் போலே காதலை-தோழியவள்
வலி வரி கண்டு விழி நீர் சிந்துகின்றேன் நான் 


என் காதலும் என்ன ஆகுமோ
தோழி இவள் காதல் போலே
கவிதையோடு மட்டும் உறவாடுமோ
இல்லை கடைசி வரை உடன் வருமோ
புரியாத புதிரை எண்ணி ஒரு கண்ணீர் துளி 


வரிகள் என்று நோக்கிதான்
வம்பிழுக்க நானும் படித்தேன்-அவள்
வலிகளை மட்டுமே வரிகளாய்
வடித்திருப்பதை அறியாமலே....!
சிவப்பு ரோஜா சில்லினுள்ளே சிக்கி
தவிப்பது போல ஆனது என் உள்ளம்,,,!

0 comments:

Post a Comment