Wednesday, December 31, 2014

2015-வருக வருக புத்தாண்டே!

புத்தொளி பரவி நிற்க,
புது வசந்தம் வீசி வர,
இன்னல்கள் பறந்தோட,
இன்பத் தென்றல் எமை வருட,
வல்லமைகள் கரம் சேர்ந்த
வாழ்வெங்கும் மகிச்சி பொங்க,
வருக வருக புத்தாண்டே!  
***2015***

Saturday, December 27, 2014

குற்றும் விழியழகி

உன் மந்தகார புன்னகையும்
மதி மயக்கும் விழிகளும்
என்னை கதிகலங்க செய்யுதடி!
மந்திரித்த சேவல் போல,
மயிலே உன்னழகை கண்டு-இந்த
மன்மதனும் மயங்கி விட்டேன்!


இனியொரு முறையேனும்,
ஏறெடுத்து பார்த்து விட்டாள்,
பார்வையாலே பரிதித்டுவாயோ
என் வாலிப வயதின் வயதின்
வம்பு தும்பனைத்தையும்...!


உன் விழிபார்வை கண்டே
என் உயிரும் ஊசலாடுதே!-மீதி
மூடி வைத்த அழகையும்
முன் நின்று பார்க்க நேர்ந்தால்-என்
உயிர் மூச்சும் நின்று போகுமோடி! 


ஆழ்கடல் தாண்டி செல்லும்
உன் அறியா பார்வையாலே!
அத்தனையும் செயலிழந்து
அடிமனது சொல்கின்றது-என்
அடிவானுக்கு சொந்தக்காரி,
நீயொருத்தி தானாம் என்று!

Wednesday, December 24, 2014

நத்தார் நாயகனே!

மார்கழி மாத முன் பனிக் காலம்
கொட்டும் பனிப்பாளம்
வெடவெடுக்கும்

விடியற்கால சாமம்


மாட்டைக்குடிலில்
மரியாள் மடியில்
இடையர்கள் நடுவில்
மா மன்னவர் மழலை வடிவில்


பிறந்தது தொழுவமதில்-சுரந்தது
அன்பெனும் செல்வம்
அழுபவர் கண்களின் நீர்தனை
அன்புடன் துடைத்திடும்
மனம் கொண்டு
அடுத்தவர் வாழ்வில்
துயரினைக் கண்டு
அழுதிடும் நெஞ்சினை
அடைந்திடும் வழி


விளக்கிடும் வகையில்
வாழ்ந்திட்ட தேவமைந்தன்
வியந்திடும் கருத்துக்கள்
மொழிந்திட்டான்
விடிந்திடும் வாழ்க்கை
உழைப்பவர் வாழ்வில்
விரைந்திட்டு நாமும்
வரைந்திடுவோம் காவியம்


இளைஞர் எம்
முன்னோடியே
விடுதலைப் போராளியே..
நாமும் வருவோம்
உனது தடம்படித்தே..!
தோழனே ஜேசுவே
உன் பிறந்த நாளில் உமை
அன்போடே நினைவுகூறுகிறோம்..!


வொட்காவுக்கோ.! வைனுக்கோ.! அல்ல
கேக்குக்கோ,! புடிங்குக்கோ.! அல்ல
சாண்டாவுக்கோ.! சாந்தாவுக்கோ.! அல்ல
உன் தியாகத்தை மனதில் இருத்திட
உன் தடம் பற்றி நின்றிட..!


இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்!

பருவம் வந்தாள் பாசமலர்!

பாசமலர் ஒன்று இன்று
"பருவம்" அடைந்தது
அதன் பாசம் வீசும் வேகம்
என் கோபம் பறந்தது


"அண்ணன்" என்ற உறவை
"அப்பன்" என்ற உறவாக மாற்ற
அன்பு "தங்கையவள்" அடைந்தாள்
பெண்ணின் அடுத்த நிலை!


பாசம் பலவகை
வேஷமில்லா பாசம்
உயர்வகை-அதில்...
தங்கைப் பாசம் தனிவகை!


சகோதரப் பாசமெனும்
சாகரத்தில் மூழ்கவைத்து
சந்தோஷத்தில் முகிழ வைக்கும்
உற்சாக உறவு தங்கை!


அண்ணன் அழுதால்
அவளும் அழுது...
அண்ணன் சிரித்தால்...
அவளும் சிரித்து...
வண்ணம் கூட்டும்
சின்னப் பறவை!  


இல்லமெனும் கூட்டில்
இன்பமிறைக்கும்
இனிய வானம்பாடி!
அண்ணனின் பெருமையை
அனைவருக்கும் பரப்பும்
ஆகாசவானி!


குடும்ப வானத்தின்
குளிரூட்டும் நிலவு,
கடுஞ்சொற்கள் தாங்காது
துவண்டு விடும் இலவு!
சில நேரங்களில் மட்டும்
சுகமான செலவு!

23-12-2014---->

அழைத்து விடு அழகியே!

தொலைந்த என் இதயம்
தொலைவில் செல்லும்
உன்னை தொடர்வதை கண்டேன்…!


மறந்த உன் முகத்தை
மலர்ந்த மலர்களில் எல்லாம்
மனத்துடன் கண்டேன்…!


மந்திரித்த சேவல்
போல் மந்திரமாய்-உன்
பெயரை மங்காமல் கூவுகிறேன்…!


சில்லறை சிரிப்படி உனக்கு;-ஆஹா
சிந்தனை சிதருதடி எனக்கு…!!
சித்திரையின் நித்திரையில்;
முத்திரையையாய் உன் கனவு…!!


மார்கழி குளிரும் மதி மயக்குதடி
உன் மான் விழிகள் காணமல்
என் உள்ளம் தவிக்குதடி!
கருங்குயிலே உனது
கானகக்குரல் கேளாமல் -என்
காதுகளும் கட்டறுந்து போனதடி!


தூங்க மறுக்குதடி என் விழிகள்..!-ஐயோ
கேட்க விரும்புதடி உன் மொழிகள்…!
அழைத்து விடு அழகியே!-மீண்டும்
உயிர்பித்து விடு பழகியே!

Saturday, December 20, 2014

இயற்கையின் இம்சைகள்!

இலங்கை திருநாடெங்கும்
இதமான மழை விழ்ச்சி!
பூத்து குளுங்கும்
பூந்தோட்டங்களும்
பார்த்து சிரிக்கும்
பழம்பெரும் குளங்களும்


ஆகாய சூரியனும் அடைமழைக்கு
வழிவிட்டு ஆறுதலாய்
அவனியிலே ஓய்வெடுக்க
சென்று விட்டான்!


தயக்கம் இன்றி மழையும்
தாறு மாறாய் பொழிவதை கண்டு!
திக்கி திணறிய விவசாயியும்
தட்டு தடுமாறி நிற்கின்றான்
தாரமாய் வந்தவளுக்கு
தானம் வழங்க முடியாமல்


இயன்ற வரை இல்லையென்றாமல்
இல்லாதவருக்கு அள்ளி
கொடுக்கும் இலங்கையருக்கே
இல்லமும் பறி போகும் நேரம்


வீசும் காற்றும் பொழியும் மழையும்
இழுத்தும் அடித்தும் செல்லும்
பலர் இல்லங்களை....!


விட்டு விட்டு பெய்த மழை
விடாமல் பெய்வதனால்
வீதியெங்கும் நீர்வீழ்ச்சி
வீரிட்டு பாய்கின்றதே!


முப்பாட்டன் தலைமுறைகளும்
முதுமைபெற்ற குலங்களுமே -உன்
குறும்பிலே சிதைந்து போகின்றது
ஐயோ பாவமடா ஆண்டவா!
நிறுத்தி விடு உன் விளையாட்டை!


அழகான கிராமங்களை உன்
மழையருவியால் அழித்து விடாதே
ஆண்டு தோறும் பொழியட்டும்
அளவான மழைவீழ்ச்சி
ஆண்டாண்டு வாழ வேண்டும்-அழியா
தமிழ்த்தலை முறைகள்!

Tuesday, December 16, 2014

பாடசாலை சிதறல்கள்!

பெற்ற "தாய்" மறந்திடினும்
பிறந்த "மண்" அழிந்திடினும்
கற்ற "கல்வி" அதை கற்பித்த "பள்ளி"
உன்னை மறவேன் என்றும்!


அதிகாலை ஆயிடிச்சா
அரக்க பறக்க எழுந்திடிச்சு
அரைகுறையா முகம் கழுவி
அடுத்த வீட்டு வேளியிலே
அலைமோதும் காற்சட்டையை
அரைமணிநேரம் போராடி
அதன் பின் எடுத்து போட்டு கொண்டு
அரைவயிறு கஞ்சி உண்டு
பாய்ந்து வீழ்ந்து செல்வேன்
பாடசாலைக்கு அன்று நானும்!


பட பட என்ற ஓசை நெஞ்சில்
அசம்புலி ஆரம்பிசு ஐந்து நிமிசமாச்சே
ஐயோ இன்று செத்தேன் நான்
சமாளிப்புக்கு பொய் தேடி
அவசரத்துக்கு அதுவும் இல்லை
"உதவி அதிபரும்" உபசரிக்க வந்திடுவேர்
வாங்கிய அடியுடன் வகுப்பறை
வரவேற்கும் என்னை!


ஆண்டு ஒன்றிலே,
அரிவரி நான் படிக்காம
"நிலா" டீச்சர் போட்ட அடி!
இன்றும் என் நினைவில்
நீங்காமல் இருக்கு இப்போ!


கைபிடிச்சு கலை படிக்க
கற்பித்த ஆசானே உமக்கு!
அழியா இடமுண்டு
என்றும் என் நெஞ்சில்!


அழகிய நண்பர் கூட்டதோடு
ஐந்தாம் வகுப்பு வரையில்
அலசல் புலசல் பலவும்
அடிக்கடி அடிதடியும்
அன்பின் அரவணைப்பும்!
எமக்கிடையே வந்து போகும்
மனதை மயக்கும் "கன்னியர்" சிலரும்


கல்லூரி கலைந்தவுடன்
மாணவ செல்வங்களின்
கல்லடி தாங்காமல்!
மாமா வீட்டு மாமரமும்
மறைவதற்கு இடம் தேடிய காலம்!


புலமை காட்ட என்று புலமை பரீட்சை
ஒன்று புது வடிவில் வந்திச்சு அன்று!
குங்கும பெயர் கொண்டு
குலவிளக்காய் ஒரு ஆசான்
"ரதி" டீச்சர் வந்தமர்ந்தா
ஆண்டு ஐந்து ஆரம்பத்தில்


அழகாய் பாடம் சொல்லி
அன்பால் என்னை அள்ளி
அணைத்து கொண்ட ஒரு ஆசான்
ஆண்டு பல கடந்தும் -அழியா
உருவமாய் என்மனதில் இன்றும்!


நண்பரோடு விளையாடுகையில்
நாடியில் வந்த தளும்பு-இன்றும்
நிலைத்திருக்கு நீங்க நினைவு போல
ஆயினும் என்ன பயன்!


காலம் கடந்திடிச்சு கடலும் தாண்டியாச்சு!
என் கனவுகளும் கலைந்திடிச்சு!
கடவுளிடம் வேண்டுகின்றேன்
மீண்டும் கல்லூரியில் நான்
கற்கும் படி செய்யுமாறு!

Saturday, December 6, 2014

நிலவும் நானும்!

தேய்ந்த நிலவை பிடித்து
தேவதை உன்னை விசாரித்தேன்
தேவனவன் துணையில் உன்
தேவதையும் நலம் என்றது!


சட்டென்று பல கேள்வி
சடுதியாய் தொடுத்தேன்
மூ வேளை ஆகாரம்
மூச்சு முட்ட உண்டாளா?
துயில் கொள்ளும் வேளையில்
தூக்கம் இன்றி தவித்தாளா?


அறுசுவை உணவையும்
அழகாய் சமைத்து போட்டாலும்!
அதை காட்டி இதை சாட்டி
அனைத்தையும் வெறுத்தொதுக்குவாளே!


சற்றே திமிரும் அவளுக்கு
முற்றே கோவம் வந்தால்!
முன்னிருப்பவரை கண் பாராமல்
கதை பேசி வெட்டி செல்வாளே!


என்னோடு பேச வந்தால்
எள்ளளவும் கோவம் இன்றி
எண்ணிய பலவும் பேசி தீர்த்து
எண்ணமெல்லாம் வளர்த்து விட்டு
என்னையும் மயக்கி விட்டு
எத்திசையென அறியமுன்
எழுந்தோடி செல்வளே!


பருவம் வந்த நிலவடி அவள்!
பரீட்சைக்கு தோற்ற வேண்டி
பகலிரவாய் படிக்கின்றாளோ-இல்லை
பாட்டு தான் பிடிக்கும் என்று
பண்ணிசை தான் கேட்கின்றளோ!


நேற்றுத்தானே பேசவில்லை
நெடுநாளாய் தெரிகின்றதே!
நெஞ்சமும் வலிக்குதடி! தோழி!
கொஞ்சம் அவளை அழைக்க சொல்லு
கொஞ்சி நாலு வார்த்தை பேச!


கொஞ்சிப்பேச நீ கெஞ்சிக்கேட்டது
மதி(நிலவு) எனக்கே வலிக்குதடா!
உண்மை ஒன்று சொல்கின்றேன் கேள்
உரைக்கும் படி இருக்குமாடா!


நிலவுக்கே தேவதையவள்
நித்தமும் உன் நினைவிலே தான்
பொங்குகடல் தாண்டி நீ இருக்க-அவளுக்கு
பொங்கி எழுகின்றது உன் நினைவுகளும்


அதிகாலை ஆகிடிச்சு தோழா-என்
ஆதவனும் வந்து விட்டான்!
வங்ககடல் மீதாணையடா
வருமொரு நற்செய்தி உனக்கு
வண்ண மலர்மாலையுடன்
வருந்தாதே தோழா! வருகின்றேன் நாளை!

Monday, December 1, 2014

ஏதடா இன்பம்!

பெண்மையின்,
மென்மை கண்டு
மயங்கி நிற்கும் மடையரே!
அதிலும் உண்டு
முற்கள் என்று
அறியதிருப்பதேனோ நீரும்!


சீரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை
நம்பாதேயென்று,
பேரறிவாளன் சொன்னதுவும்
உம் செவிகளுக்கு,
எட்டவில்லையோ?


எத்தனை துன்பங்கள்
அதிலேது இன்பங்கள்
பெண்மையிலும் உண்டோடா!
ஒரு நாள் இன்பமும்
மறுநாள் துன்பமும்
துரத்தியே கொள்ளுமடா!


பேரின்பம் பெரும் துன்பம்
பெண்களிடம் உள்ளதடா!
பேதையாய் நீ இருந்தும்
பெற்றவளுக்கு ஏதுவடா?
பெரிதாய் ஒரு இன்பம்!


பத்து மாதம் சுமந்து வந்து,
பகலிரவாய் பசி கிடந்தது,
பால் ஊட்டி வளர்த்து விட
பால்மணம் மாற முன்னே,
பாச முகம் மறந்துதானே -அந்த
பாவாடை பின்னே சென்று,
பாதியிலே உயிரை விடுறாய்.


வேணாம்டா இந்த இழவு,
விட்டு விடு அந்த துளைவை,
இல்லையேல் விழுந்துவிடும்,
நம் வீட்டிலும் ஒரு இழவு!