Saturday, December 20, 2014

இயற்கையின் இம்சைகள்!

இலங்கை திருநாடெங்கும்
இதமான மழை விழ்ச்சி!
பூத்து குளுங்கும்
பூந்தோட்டங்களும்
பார்த்து சிரிக்கும்
பழம்பெரும் குளங்களும்


ஆகாய சூரியனும் அடைமழைக்கு
வழிவிட்டு ஆறுதலாய்
அவனியிலே ஓய்வெடுக்க
சென்று விட்டான்!


தயக்கம் இன்றி மழையும்
தாறு மாறாய் பொழிவதை கண்டு!
திக்கி திணறிய விவசாயியும்
தட்டு தடுமாறி நிற்கின்றான்
தாரமாய் வந்தவளுக்கு
தானம் வழங்க முடியாமல்


இயன்ற வரை இல்லையென்றாமல்
இல்லாதவருக்கு அள்ளி
கொடுக்கும் இலங்கையருக்கே
இல்லமும் பறி போகும் நேரம்


வீசும் காற்றும் பொழியும் மழையும்
இழுத்தும் அடித்தும் செல்லும்
பலர் இல்லங்களை....!


விட்டு விட்டு பெய்த மழை
விடாமல் பெய்வதனால்
வீதியெங்கும் நீர்வீழ்ச்சி
வீரிட்டு பாய்கின்றதே!


முப்பாட்டன் தலைமுறைகளும்
முதுமைபெற்ற குலங்களுமே -உன்
குறும்பிலே சிதைந்து போகின்றது
ஐயோ பாவமடா ஆண்டவா!
நிறுத்தி விடு உன் விளையாட்டை!


அழகான கிராமங்களை உன்
மழையருவியால் அழித்து விடாதே
ஆண்டு தோறும் பொழியட்டும்
அளவான மழைவீழ்ச்சி
ஆண்டாண்டு வாழ வேண்டும்-அழியா
தமிழ்த்தலை முறைகள்!

0 comments:

Post a Comment